‘குட் பேட் அக்லி’ முதல் தோற்றம் வெளியீடு


சென்னை: நடிகர் அஜித்குமார், மகிழ்திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்குமார் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் சமீபத்தில் தொடங்கியது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் துப்பாக்கிகளுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கிறார், அஜித்குமார்.

2025-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இதன் முதல் தோற்ற போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.