[X] Close

விஜய் சேதுபதி திரைக்கதையில் விஷ்ணு விஷால், விக்ராந்த்: அதிகாரபூர்வ அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 20 Jun, 2019 18:57 pm
  • அ+ அ-

விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் படத்துக்கு, விஜய் சேதுபதி திரைக்கதை எழுதியுள்ளார்.

விக்ராந்த் ஹீரோவாக நடித்து 2015-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘தாக்க தாக்க’. இந்தப் படத்தை இயக்கியவர் விக்ராந்தின் சகோதரரான சஞ்சீவ். இவர், மறுபடியும் விக்ராந்தை ஹீரோவாக வைத்து இன்னொரு படத்தை இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். இந்தப் படத்துக்கு, விஜய் சேதுபதி வசனம் எழுதினார். ஆனால், அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டது.

இந்நிலையில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து வேறொரு படத்தை இயக்குகிறார் சஞ்சீவ். இந்தப் படத்துக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார் விஜய் சேதுபதி. ‘ஆரஞ்சு மிட்டாய்’ மற்றும் ‘சென்னை பழனி மார்ஸ்’ படங்களுக்கு ஏற்கெனவே விஜய் சேதுபதி திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்று (ஜூன் 20) ரிலீஸாகியுள்ளது. இது விஷ்ணு விஷாலின் 18-வது படமாகும். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் ஏற்கெனவே யுவன் இசையமைத்த ‘இடம் பொருள் ஏவல்’ படம் இன்னும் ரிலீஸாகவில்லை.

இந்தப் படத்தை சுஜாதா என்டெர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஆனந்த் ஜாய் தயாரிக்கிறார். ‘வீழ்வது தவறில்லை, வீழ்ந்தே இருப்பதுதான்’ என இந்தப் படத்துக்கு டேக்லைன் தரப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இதன் படப்பிடிப்பு, விரைவில் தொடங்க இருக்கிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close