[X] Close

தலைவா அரசியலுக்கு வா: மதுரையில் விஜய் ரசிகர்களின் போஸ்டர்


  • kamadenu
  • Posted: 20 Jun, 2019 17:25 pm
  • அ+ அ-

நடிகர் விஜய்யை அரசியலுக்கு வரவேற்று மதுரையில் அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் வரும் 22-ம் தேதி வருகிறது. இதனையொட்டி மதுரையில் விஜய் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வரவேற்று போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

போஸ்டரில் இடம்பெற்ற சில வாசகங்கள்:

மக்களைக் காப்பாற்ற வா தலைவா, இன்னொரு போஸ்டரில் கடவுள் எடுக்கப்போவது 63-வது அவதாரம்.. தொட்டுப் பார்க்க முடியாத 45 வயது மின்சாரம், தளபதிக்கு அரசியலில் இறங்க தயக்கமில்லை.. இறங்கினால் வேறு எந்தக் கட்சிக்குமே இடமில்லை.

poster 2.JPG 

சமூகவலைதளங்களில் மீண்டும் அஜித் - விஜய் ரசிகர்களில் யார் முன்னிலை என்ற ஹேஷ்டேக் போட்டி நேற்று நடைபெற்றது. இந்திய அளவில் முதலிடத்தில் விஜய் பிறந்த நாள் தொடர்பான ஹேஷ்டேகும், இரண்டாம் இடத்தில் விஜய்க்கு எதிரான ஹேஷ்டேகும் ட்ரெண்டானது.

poster 3.JPG 

இந்நிலையில் இன்று மதுரையில் விஜய் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வரவேற்று நகரின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close