[X] Close

‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ படத்தில் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நடிகர்


  • kamadenu
  • Posted: 20 Jun, 2019 15:57 pm
  • அ+ அ-

மாதவன் நடித்து, இயக்கிவந்த ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ படப்பிடிப்பு, செர்பியாவில் நிறைவடைந்துள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி ‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ என்ற படம் தயாராகி வருகிறது. இதில் நம்பி நாராயணனாக நடிப்பதோடு, படத்தையும் இயக்கி வருகிறார் மாதவன்.  முதலில் ஆனந்த் மகாதேவனோடு இணைந்து படத்தை இயக்கத் திட்டமிட்டார் மாதவன். ஆனால், கருத்து வேறுபாடால் மாதவன் மட்டுமே தற்போது இயக்கி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது. இதில், நம்பி நாராயணன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்ரன். இதன் மூலம் 17 ஆண்டுகள் கழித்து மாதவன்  - சிம்ரன் ஜோடி இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நடிகர் ரான் டொனாச்சி மற்றும் ‘டவுன்டவுன் அபை’ நடிகை பிலிஸ் லோகன் என இரண்டு ஹாலிவுட் நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அத்துடன், பாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவைச் சேர்ந்த சிலரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இதன் படப்பிடிப்பு சமீபத்தில் செர்பியாவில் முடிவடைந்துள்ளது. இந்தத் தகவலை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மாதவன்.

1990-களில் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளுக்குக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். அதில் தன் பணியை இழந்து, சிறைவாசமும் அனுபவித்தார். சமீபத்தில் இந்த வழக்கில் அவர் நிரபராதி என்று விடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகக்து.

madhavan.jpg 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close