[X] Close
 

இணையத்தை கலக்கும் தமிழ்படம் 2.0 போஸ்டர்: எகிறும் எதிர்பார்ப்பு


tamilpadam-2-0-poster-goes-viral

  • பாரதி
  • Posted: 13 Jun, 2018 13:31 pm
  • அ+ அ-

தியானம் செய்யும் கோலத்தில் மிர்ச்சி சிவா அமர்ந்திருப்பதுபோல் வெளியிடப்பட்டது தமிழ்ப்படம் 2.0 முதல் போஸ்டர். அன்று முதலே தமிழகம் முழுவதும் அப்படத்துக்கு ரசிகர்கள் குவிந்துவிட்டனர்.

தியானத்தில் இருப்பது யார் என்றெல்லாம் எந்த வாசகமோ அறிவிப்போ இல்லை. ஆனால் போஸ்டர் செம்ம ஹிட். படத்துக்கு அன்று தொடங்கிய எதிர்பார்ப்பு இன்றளவும் நீண்டு கொண்டிருக்கிறது.

லேட்டஸ்டாக ஒரு போஸ்டரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. அந்த போஸ்டரின் மிர்ச்சி சிவா கோட்சூட் போட்டு அமர்ந்திருக்க சுற்றிலும் சிலர் ஒவ்வொரு போஸில் நின்றிருப்பர்.

இந்த போஸ்டரானது, அண்மையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கு அவருக்கு எதிராக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், அருகில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே என உலகத் தலைவர்கள் நின்றிருக்கும் புகைப்படத்தைப் போன்று உள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பையே கலாய்க்கும் விதமாக அமைந்துள்ள இந்த போஸ்டரை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். உலகத் தரத்தில் போஸ்டர் என்றெல்லாம் புகழ்ந்து வருகின்றனர். சிலர் ஐ ஆம் வெயிட்டிங் என்று போஸ்டரைப் பகிர்ந்து கருத்து பதிவு செய்துள்ளனர்.

அண்மையில் படத்தின் தயாரிப்பாளர் ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’  சஷிகாந்த் தனது ட்விட்டரில் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்து பதிலளித்திருந்தார். தமிழிசை, ஹெச்.ராஜா புகைப்படத்தைப் போட்டு அவர்கள் இருவருமே தங்களை படத்தில் கலாய்த்திருக்கிறீர்களா என கேட்பது போல் ட்விட்டராட்டி ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு சஷிகாந்த்,
தங்களது ஆர்வம் புரிகிறது. நிச்சயமாக முடிந்ததை செய்வோம் என உறுதியளித்திருந்தார்.

இப்படித் தமிழ்த்திரை ரசிகர்களை ரிலீஸுக்கு முன்னதாகவே வசப்படுத்தியுள்ளது தமிழ்ப்படம் 2.0.

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தமிழ்ப்படம் 2.0’. 2010-ம் ஆண்டு வெளியான ‘தமிழ்ப்படம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இது. ‘மிர்ச்சி’ சிவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். சதீஷ், சந்தானபாரதி, மனோபாலா, நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

 
 



MGR - Kindle Edition


[X] Close