[X] Close

‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் தனுஷ்


  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 14:07 pm
  • அ+ அ-

‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் வருகிற 21-ம் தேதி ரிலீஸாகும் படம் ‘பக்கிரி’. தனுஷ் நடிப்பில் வெளியான ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’ ஹாலிவுட் படத்தை டப் செய்து, தமிழ் உள்ளிட்ட சில இந்திய மொழிகளில் வெளியிடுகின்றனர். கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம், காமெடி அட்வெஞ்சர் வகையைச் சேர்ந்தது.

இதன் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள தனுஷ், ‘அந்தாதுன்’ இந்திப் படத்தை ரீமேக் செய்யும் திட்டம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அதன் ரீமேக் உரிமையைப் பெற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, இந்தப் படத்தை அவருடைய வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கும் எனத் தெரிகிறது.

அத்துடன், 2008-ம் ஆண்டில் இருந்து எந்த ரீமேக் படத்திலும் நடிக்காத தனுஷ், சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு ஒரு ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு (2018) வெளியான ‘அந்தாதுன்’ இந்திப் படத்தில், தபு, ஆயுஷ்மான் குர்ரானா, டாப்ஸி ஆகியோர் நடித்தனர். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், சூப்பர் டூப்பர் வெற்றியடைந்தது. 32 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு, 10 மடங்குக்கும் மேல், அதாவது 441 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’, துரை செந்தில்குமார் இயக்கும் படம், ‘ராட்சசன்’ ராம்குமார் இயக்கும் படம், ‘பரியேறும் பெருமாள்’ மாரி செல்வராஜ் இயக்கும் படம் ஆகியவை தற்போது தனுஷ் கைவசம் உள்ளன. மேலும், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் இந்திப் படத்தில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார் தனுஷ்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close