[X] Close

சினிமாவில் இனி முடிவே இல்லை: நாஞ்சில் சம்பத் குஷி


  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 20:39 pm
  • அ+ அ-

சினிமாவில் இனி முடிவே இல்லை என்று 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' இசை வெளியீட்டு விழாவில் நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.

'கனா' படத்தைத் தொடர்ந்து 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்ற படத்தைத் தயாரித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதில் 'விஜய் டிவி' ரியோ, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரோடு, தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார். 

இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாஞ்சில் சம்பத் இவ்விழாவில் பேசும் போது, “தகுதியுள்ள தமிழர்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகிற தகுதியைப் பெற்றுள்ள சிவகார்த்திகேயனுக்கு என் முதல் நன்றி.

நான் இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒரு புள்ளியைப் போட்டவன் தம்பி ரேடியோ மிர்ச்சி ஷா. இப்போது ஒரு பாடல் பார்த்திருப்பீர்கள். அதுவொரு தனியார் தொலைக்காட்சியில் என்னைக் காயப்படுத்த வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 'துப்புனா துடைச்சிக்குவேன்' என்று பதில் சொன்னேன். அது எனக்கோ வந்து ஆப்பா அமையும் என்று நினைக்கவில்லை. இப்போது துப்புனா துடைச்சிக்கலாம் போல என்று தான் தெரிகிறது.

என் மண்ணைச் சேர்ந்த கார்த்திக் வேணுகோபாலன் இயக்குநராக இந்தப் படத்தில் முத்திரை பதித்துள்ளான். ஒளிப்பதிவாளர் யு.கே. மாதிரி உடை போட்டு நடக்கணும் என்று எனக்கொரு ஆசையுண்டு. ஆயிரம் கவலைகள் இருந்தாலும் படப்பிடிப்பில் யு.கே.செந்தில்குமாரை பார்த்துவிட்டேன் என்றால் பூவாக மலர்ந்து விடுவேன். தலைப்புகளில் பேசி 42 தங்கப் பதக்கங்களைப் பெற்றவன்.

'எனக்கு முடிவே இல்லை' என்ற தலைப்பில் பேசச் சொல்லியுள்ளார்கள். என்னோட நடை தள்ளாடலாம், தடுமாறலாம், தள்ளாட்டம் காணலாம். ஆனால், நான் கொண்டுள்ள லட்சிய உணர்வுகளுக்கு முடிவே இல்லை என்று சொன்ன கலைஞரின் 96-வது பிறந்த நாள் இன்று.

இந்தப் படம் சின்ன பட்ஜெட்டில் எடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால், வேஷ்டி சட்டை கூட இப்படி இருக்கே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். என்னோட வெளிச்சத்தில் ஒரு பகுதி 'BLACK SHEEP' யூ-டியூப் சேனலுக்கு உண்டு. அவர்களுக்கு கொடுத்த பேட்டிக்குப் பிறகு, அவர்கள் என்னுள் ரத்தமும் சதையுமாக கலந்துவிட்டார்கள். சினிமா இதழ்கள், தினசரி பேப்பர்களில் வரும் சினிமா செய்திகள் என எதையும் படிப்பதில்லை.

நான் சினிமாவுக்கு ரொம்ப அந்நியமானவன். ஆனால், இந்தப் பாடலைப் பார்த்தப் பிறகு சினிமாவில் இனி நாஞ்சில் சம்பத்துக்கும் இனி முடிவே இல்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்” என்று பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close