[X] Close

உச்சத்தில் 'காலா' பைரசி: ஒரே நாளில் 4000 லிங்க்குகள் நீக்கம்!


kaala-piracy-and-producer-councils-tweet

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Jun, 2018 12:04 pm
  • அ+ அ-

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் காலா. நேற்று (ஜூன் 7) படம் ரிலீஸ் ஆன நிலையில் ஆன்லைனில் கள்ளத்தனமாக படம் கசியவிடப்பட்டிருக்கிறது.

படம் வெளியான ஒரே நாளில் 4000 பைரசி லின்க்குகள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இது குறித்து கவலை தெரிவித்துள்ள தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் கூட்டமைப்பின் பைரசி தடுப்புப் பிரிவு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "காலா திருட்டு உச்சத்தில் இருக்கிறது. தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சிலின் பைரசி தடுப்புப் பிரிவு இணையத்திலிருந்து 4000 லின்க்குகளை முடக்கியுள்ளது. தெலுங்கு திரைப்பட ஆன்ட்டி பைரசி குழுவும் இணைந்து செயலாற்றிவருகிறது" எனப் பதிவிட்டுள்ளது.

#killpiracy என்ற ஹேஷ்டேக் கீழ் இந்த ட்வீட் பகிரப்பட்டுள்ளது. காலா திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close