[X] Close

கமலா மற்றும் உதயம் திரையரங்குகளில் ‘காலா’ வெளியாகாதது ஏன்? - தயாரிப்பு நிறுவனம் விளக்கம்


kaala-release-controversy

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 06 Jun, 2018 15:58 pm
  • அ+ அ-

கமலா மற்றும் உதயம் திரையரங்குகளில் ‘காலா’ வெளியாகாதது ஏன் என்று  தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘காலா’ திரைப்படம் நாளை (ஜுன் 7) தமிழகத்தில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதில் சென்னையிலுள்ள முக்கியமான திரையரங்குகளான கமலா மற்றும் உதயம் ஆகியவற்றில் இப்படம் வெளியாகவில்லை.

இது குறித்து திரையரங்க நிர்வாகம், “ ’காலா’ விநியோகஸ்தர்கள் அதிகமான விலைக்கு டிக்கெட் விற்கச் சொன்னார்கள். நாங்கள் அதற்கு தயாராக இல்லை” என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் சமூகவலைத்தளத்தில் பெரும் விவாதமாக உருவெடுத்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ‘காலா’ படத்தின் தயாரிப்பு நிறுவமான வுண்டர்பார் பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் “மற்ற திரையரங்குகளிடம் போட்ட ஒப்பந்தத்தைப் போல கமலா மற்றும் உதயம் திரையரங்குகளிடம் போட்ட ஒப்பந்தத்துக்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதிக கட்டணம் வசூலிக்கச் சொன்னதாக பரவும் செய்திகள் முற்றிலும் பொய், ஆதாரமற்றவை” என்று விளக்கமளித்திருக்கிறார்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close