[X] Close

ஆரவாரம் இல்லாமல் ஆறுதல் சொன்ன விஜய்: பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்


netizens-hail-actor-vijay

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Jun, 2018 15:19 pm
  • அ+ அ-

தூத்துக்குடி மக்களுக்கு ஆரவாரம் இல்லாமல் ஆறுதல் சொன்ன நடிகர் விஜய்யை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி செல்வதற்கு முன் போயஸ் கார்டனில் பேட்டி. தூத்துக்குடியில் பேட்டி பின்னர் சென்னையில் பேட்டி என பரபரப்பாக நிகழ்ச்சியை அமைத்துக் கொண்டதை சுட்டிக் காட்டி மற்றவர்களைப் போல் விளம்பரம் தேடாமல் ஆறுதல் சொன்னதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

திரையுலகப் பிரபலங்கள் சிலரும் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள். அஜித் ரசிகர்களும்கூட விஜய்யைப் பாராட்டியிருக்கிறார்கள் என்பதுதான் ஹைலைட்.


அவற்றின் தொகுப்பு:

@Hariadmk
 இதனால்தான் தளபதியாக இருக்கிறார். விளம்பரம் இல்லாதவர். விஜய்யின் ரசிகராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

@AravindhTHALA1
செம்ம சார். உங்கள் மனிதாபிமானத்தைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.

@SurendharMK
எப்போதும் மனசாட்சிக்கு உண்மையாக நடப்பவர். தலைவணங்குகிறேன். 

@Priya_BSankar
ஒரு தமிழச்சியாக உங்களைக் கண்டு பெருமை கொள்கிறேன்.

@i_vijaysethu
உச்சபட்ச மரியாதையை உரித்தாக்குகிறேன் விஜய்

@sujavarunee
விஜய் சாருக்கு ஒரு பெரிய சல்யூட்

@TRBRajaa
 விஜய் நடந்து கொண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போதும் இப்படித்தான் ஆரவாரம் இல்லாமல் வந்து சென்றார். இது போன்ற நிகழ்வுகளில் அவர் தன்னடக்கத்துடன் நடந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பெருமையாக இருக்கிறது.

@LMKMovieManiac
நல்ல மனிதன், அக்கறையுள்ள தமிழன்..

Thala Bala @TOANHF 
தல ரசிகனிடமிருந்து ஒரு மிகப்பெரிய வணக்கம்

@jeranjit
ஒரு சாவு வீட்டுக்கு இப்படிச் சென்றுதான் துக்கம் விசாரிக்க வேண்டும். திறந்த வேனில் நின்று எல்லோரையும் பார்த்து கையை அசைத்துக் கொண்டு அல்ல.

@dumeelmusic
ஒரு நடிகராக நீங்கள் எங்களில் சிலரது மனங்களை வெல்லாமல் போயிருக்கலாம். ஆனால், ஒரு மனிதராக நீங்கள் அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டுவிட்டீர்கள்.

இப்படியாக விஜய்யை பாராட்டி ட்வீட்கள் குவிந்து வருகின்றன.

முன்னதாக, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்துக்கு, நடிகர் விஜய் நேற்றிரவு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் 100-வது நாளில், திடீரென வன்முறை வெடித்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பலியானோர் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும் ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு தூத்துக்குடிக்குச் சென்றார் விஜய். பலியானோர் குடும்பங்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, தலா 1 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கினார். காலையில் வந்தால் ரசிகர்கள் கூடிவிடுவார்கள் என்பதால் இரவில் வந்ததாகவும், தவறாக எண்ண வேண்டாம் என்றும் பலியானோர் குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டார் விஜய்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close