[X] Close

ஹெச்.ராஜா, தமிழிசையை கலாய்த்திருக்கிறீர்களா?- ரசிகரின் கேள்வியும் 'தமிழ் படம் 2.0' படக்குழுவினரின் பதிலும்


twitteratis-make-fun-of-tamilpadam-2-0

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Jun, 2018 14:15 pm
  • அ+ அ-

தமிழ் படம் 2.0 போஸ்டர் வெளியான நாள் முதலே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அண்மையில், தமிழ் படம் 2.0' படக்குழுவுக்கு ட்விட்டராட்டி ஒருவர் "எங்களை கலாய்த்து ஒரு சீன் கூட டீசரில் இல்லை, இதுக்கு கூட நாங்க ஒர்த்து இல்லையா? தமிழசை, எச். ராஜா ஆவேசம்" என்று ஒரு ஃபோட்டோவையும் போட்டு பகிர்ந்திருக்கிறார்.

இதற்கு ஒய்நாட் ஸ்டூடியோஸ், தயாரிப்பாளர் சசிகாந்த், "எங்களால் உங்கள் உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த முக்கியமான பிரச்சினையில் எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்கிறோம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

தமிழ் நெட்டிசன்களால் அதிகமாக கலாய்க்கப்பட்டவர்கள் பட்டியல் சேகரித்தால் நிச்சயம் அதில் பாஜகவின் ஹெச்.ராஜா, தமிழிசையின் பெயர்கள் இருக்கும். அதன் நீட்சியோ என்னவோ திரையில்கூட அவர்கள் கலாய்க்கப்பட வேண்டும் என்ற மனநிலை உருவாகியிருக்கிறது. அதன் தாக்கமே ஒரு கலாய்ப்புப் படம் என்றவுடன் அதில் ஹெச்.ராஜாவையும், தமிழிசையும் எதிர்பார்ப்பாதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். 

2010-ம் ஆண்டு சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'தமிழ்ப்படம்'. அதற்கு முன்பாக வெளியான தமிழ்ப் படங்களின் காட்சிகளை கிண்டல் செய்து இப்படத்தின் காட்சிகளை அமைத்திருந்தார்கள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது அதன் 2-ம் பாகத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் படப் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. நாயகனாக சிவா, நாயகியாக ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அவர்களோடு சதீஷ், திஷா பாண்டே, சந்தான பாரதி, கலைராணி, மனோபாலா, R.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், OAK சுந்தர், அஜய் ரத்னம் மற்றும் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள்.

'தமிழ்ப்படம்' இயக்குநர் சி.எஸ்.அமுதனே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். சந்துரு வசனம், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு, கண்ணன் இசை, சுரேஷ் எடிட்டர், கலை இயக்குநராக செந்தில்ராகவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close