[X] Close

நான் பெரிய பாடகர்லாம் இல்லை!- விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் அனிருத்


aniruth-vijay-awards

  • kamadenu
  • Posted: 05 Jun, 2018 12:30 pm
  • அ+ அ-

கா.இசக்கிமுத்து

நான் ஒரு பெரிய பின்னணி பாடகர் அல்ல என்று விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத் குறிப்பிட்டார்.

10-வது ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று (ஜுன் 4)  கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகுமார், விஜய்சேதுபதி, அனிருத், தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றார்கள்.

இந்த விழாவில் சிறந்த பின்னணிப்பாடகருக்கான விருதினை ‘இறைவா’ பாடலுக்காக வென்றார் இசையமைப்பாளர் அனிருத். அப்போது அவர் பேசியதாவது, “கோலமாவு கோகிலா’ படத்தின் பாடல் வெற்றிக்கு ரொம்பவே நன்றி. நயன்தாராவுக்கு தான் பெரிய பாராட்டும் நன்றியும் சொல்லவேண்டும். ஏனென்றால் காமெடி நடிகரோடு நடிக்க ஒப்புக் கொண்டார்கள்.  அதற்கு ஒரு மனம் வேண்டும். அதுதான் அந்தப் பாடலின் மிகப்பெரிய வெற்றியாகியிருக்கிறது.

நான் ஒரு பெரிய பின்னணிப் பாடகர் அல்ல. என்னோடு போட்டியிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். ’மேயாத மான்’ படத்தில் பாடியிருக்கும் காக்கா பாலாவுக்கு இந்த விருதைக் கொடுத்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். அவருக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். 

இசையமைப்பாளராக வேண்டும் என்பது தான் ஆசை. பின்னணிப் பாடகராக வேண்டும் என்று நினைத்ததே இல்லை. நான் பாடுவது மற்றொரு இசையமைப்பாளருக்கோ, படத்துக்கோ உதவுகிறது என்றால் பணம் வாங்குவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அப்படித்தான். அவர்களுக்கு பாடுவதால், என் பாடல்கள் வெற்றியாகிறது என்பது என் எண்ணம்” என்று பேசினார் அனிருத்.

----

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close