[X] Close

‘சொல்வதெல்லாம் உண்மை’ வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல: லட்சுமி ராமகிருஷ்ணன் நெகிழ்ச்சி


  • kamadenu
  • Posted: 28 May, 2019 11:59 am
  • அ+ அ-

‘சொல்வதெல்லாம் உண்மை’ வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல, அதுவொரு உணர்வுபூர்வமான பயணம் என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய நிகழ்ச்சி ‘சொல்வதெல்லாம் உண்மை’. பல்வேறு விமர்சனங்களுக்குள்ளான இந்த நிகழ்ச்சியை, நிர்மலா பெரியசாமி மற்றும் சுதா சந்திரன் ஆகியோரும் நடத்தினர். ஆனால், லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும்போதுதான் பரவலான கவனத்தைப் பெற்றது. இந்த நிகழ்ச்சி, கடந்த வருடம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தான் இயக்கியுள்ள ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் பேட்டிக்காக ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி படம்பிடிக்கப்பட்ட அரங்குக்குச் சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு, பழைய நினைவுகள் வந்துள்ளன. நெகிழ்ச்சியுடன் அதைப்பற்றி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

“ ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நிறுத்தி சரியாக ஒரு வருடம் ஆகிறது. இப்போது எனது படத்தின் தணிக்கை முடிந்தபிறகு, மீண்டும் அதே அணியுடன், அதே தளத்தில் ஒரு பேட்டிக்காக இணைந்திருக்கிறேன். இறைவனின் கருணை மற்றும் உங்கள் அனைவரின் வாழ்த்துகள்(தான் காரணம்).

lakshmi ramakrishnan.jpg 

படப்பிடிப்பு தளத்தில் மிகவும் எமோஷனலாக உணர்ந்தேன். எனக்கு அது வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல, உணர்வுபூர்வமான பயணம்” எனத் தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

‘ஹவுஸ் ஓனர்’ படத்தில் கிஷோர், லவ்லின் சந்திரசேகர் இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

வருகிற ஜூன் 21-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close