[X] Close

‘தேவி 2’வில் கெஸ்ட் ரோலில்தான் நடித்துள்ளேன்: ஆர்.ஜே. பாலாஜி


2

  • kamadenu
  • Posted: 28 May, 2019 11:16 am
  • அ+ அ-

இந்த வாரம் வெளியாகவுள்ள ‘தேவி 2’ படத்தில், கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

விஜய் இயக்கத்தில் கடந்த 2016-ம் ரிலீஸான படம் ‘தேவி’. பிரபுதேவா ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஹீரோயினாக தமன்னா நடித்தார். சோனு சூட், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ஹாரர் காமெடிப் படமான இது, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழ் மட்டுமின்றி, இந்தி மற்றும் தெலுங்கிலும் இந்தப் படம் ரிலீஸானது.

இதன் மாபெரும் வெற்றியால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ‘தேவி 2’ படத்தில், முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே. பாலாஜியோடு சேர்ந்து நந்திதா ஸ்வேதா, கோவை சரளா, டிம்பிள், யோகி பாபு, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்துள்ளனர்.

முதல் பாகத்தில் நடித்த சோனு சூட், இதில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படத்தில், முதல் பாகத்தில் நா.முத்துக்குமார் எழுதிய சூப்பர் ஹிட் பாடலான ‘சல்மார்’ பாடலைப் பயன்படுத்தியுள்ளனர்.

வருகிற வெள்ளிக்கிழமை (மே 31) தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் ரிலீஸாகிறது. எனவே, இதற்கான புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. அதில், ‘ஆர்.ஜே. பாலாஜியின் காமெடி, ‘தேவி 2’ படத்திலும் மிகவும் கவனிக்கத்தக்க வகையில் இருக்கும்’ என்பது போன்ற போஸ்டரை, சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை தனது ட்விட்டரில் வெளியிட்டார்.

அதற்குப் பதிலளித்துள்ள ஆர்.ஜே. பாலாஜி, “அது உண்மையில்லை சார். ‘தேவி 2’ படத்தில் கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்துள்ளேன். இரண்டு காட்சிகளில் மட்டுமே தோன்றுவேன்” என்றார்.

அதை ரீட்வீட் செய்த ஒருவர், “அந்த இரண்டு காட்சிகளும், தலா 30 நிமிடங்கள் இருக்குமா?” என வேடிக்கையாகக் கேள்வி எழுப்பினார். “ 5 முதல் 6 நிமிடங்கள் வரை இருக்கும்” என அவருக்குப் பதிலளித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close