[X] Close

அதிக பயத்துடன் ஆடினேன்: ‘ரவுடி பேபி’ பாடல் குறித்து சாய் பல்லவி


  • kamadenu
  • Posted: 27 May, 2019 17:40 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

'ரவுடி பேபி' பாடலுக்கு அதிக பயத்துடன் ஆடியதாக சாய் பல்லவி அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் செய்த யூ ட்யூப் சாதனைகள் அனைத்தையுமே 'ரவுடி பேபி' பாடல் முறியடித்தது. மேலும், தென்னிந்தியத் திரையுலகில் அதிக பார்வைகள் கொண்ட பாடல் என்ற சாதனையையும் நிகழ்த்தியது.

'மாரி 2' படத்தில் இடம்பெற்ற அப்பாடலில், தனுஷ் மற்றும் சாய் பல்லவி இருவரும் நடனமாடனர். அப்பாடலுக்கு பிரபுதேவா நடனமைத்தார். சமூக வலைதளங்களில் பலரும் நடனத்துக்குப் பெரும் வரவேற்பு கொடுத்தனர்.

தற்போது அப்பாடலுக்கு நடனமாடியதன் பின்னணியை, 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் விவரித்துள்ளார் சாய் பல்லவி. அதில், “முதலில் தனுஷ், நடனம் மிகக் குறைவாக இருக்கும் என்று சொல்லி நம்பவைத்தார். 'அள்ளித்தந்த வானம்' படத்தில் இடம்பெற்ற 'கண்ணாலே மியா மியா' பாடல் போல இருக்கும் என்றார்.

மூன்று நாட்கள் அப்பாடலின் நடனத்துக்காகப் பயிற்சி செய்தோம். படப்பிடிப்பு அன்று பிரபுதேவா படப்பிடிப்புத் தளத்தைப் பார்த்தார். நாம் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதனால் ஒட்டுமொத்த நடன அசைவுகளையும் மாற்றினார். கடைசி நிமிடத்தில் வினாத்தாளை மாற்றுவது போல இருந்தது. நான் அதற்குத் தயாராகவே இல்லை. திரையில் நீங்கள் பார்த்தது அதிக பயத்துடன் ஆடிய சாய் பல்லவியை” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது 'மாரி 2' படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'என்.ஜி.கே.' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் மே 31-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close