[X] Close

ரேவதி சம்பத் கூறிய பாலியல் புகார்: நடிகர் சித்திக் மறைமுக பதில்


  • kamadenu
  • Posted: 27 May, 2019 14:32 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

நடிகர் சித்திக், தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார் நடிகை ரேவதி சம்பத்.

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான மீடூ புகார், தேசிய அளவில் சினிமாத்துறையில் பலர் மீது வைக்கப்பட்டு, அதில் சிலர் தண்டனைக்கும் உள்ளாகியுள்ளனர்.

தற்போது மலையாள நடிகை ரேவதி சம்பத், நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில், சித்திக் பேசியுள்ள வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார் ரேவதி. நடிகர் திலீப்புக்கு ஆதரவாகவும், மலையாளத் திரையுலகில் பெண்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள WCC அமைப்புக்கு எதிராகவும் நடிகர் சித்திக் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

இந்தப் பகிர்வுடன் நடிகை ரேவதி, “இந்த வீடியோவைத் திரும்பத் திரும்ப பார்த்தபிறகு, என்னால் இனியும் அமைதியாக இருக்க முடியவில்லை. 2016-ம் ஆண்டு, திருவனந்தபுரத்தில், நிலா திரையரங்கில் ’சுகமாயிரிக்கட்டே’ என்ற படத்தின் பிரத்யேகக் காட்சியின்போது நடிகர் சித்திக் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.

21 வயதில், அவர் என்னிடம் பாலியல் ரீதியாகப் பேசியது என்னைப் பாதித்தது. அந்தப் பாதிப்பு எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவருக்கும் ஒரு மகள் இருக்கிறார் என நினைக்கிறேன். அவர், இவரிடம் பாதுகாப்பாக இருக்கிறாரா?

இதேபோல உங்கள் மகளுக்கு நடந்தால் என்ன செய்வீர்கள் திரு. சித்திக்? wcc போன்ற ஒரு கவுரவமான, மரியாதைக்குரிய அமைப்பின் மீது எப்படி இதுபோல ஒரு மனிதர் குறைகூற முடியும்? இப்படியான முகமூடி போட்டுக் கொண்டு, துறையில் தன்னை கண்ணியமான ஆள் என்று சொல்லிக்கொள்வது வெட்கக்கேடு" என்று குறிப்பிட்டுள்ளார். 

ரேவதியின் இந்தப் பதிவுக்கு, பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். இது விளம்பரம் தேடி நடத்தும் நாடகம் எனப் பலரும் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, நடிகர் சித்திக் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தான் நடித்திருக்கும் ’கோடதி சமக்‌ஷம் பாலன் வக்கீல்’ என்ற படத்திலிருந்து ஒரு காட்சியைப் பகிர்ந்துள்ளார். அதில், அவரது கதாபாத்திரம் ஒரு பெண்ணிடம், ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல, அந்தப் பெண் 'மீடூ' என்கிறார். உடனே இவர், 'மீடூவா?' என்று பதறியடித்து ஓடுகிறார்.

இந்த வீடியோ, ரேவதியின் குற்றச்சாட்டுக்கு சித்திக்கின் மறைமுகமான பதிலாகவே பார்க்கப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close