[X] Close

கார்த்திக் நரேன் - அருண் விஜய் படத் தலைப்பு ‘மாஃபியா’?


  • kamadenu
  • Posted: 26 May, 2019 17:42 pm
  • அ+ அ-

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்துக்கு ‘மாஃபியா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். ரகுமான், அஞ்சனா ஜெயப்பிரகாஷ், டெல்லி கணேஷ், யாஷிகா ஆனந்த் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். க்ரைம் த்ரில்லரான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘நரகாசூரன்’ படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன். அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா, இந்திரஜித் சுகுமாறன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் நரேன் தயாரித்த இந்தப் படத்தில், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இணை தயாரிப்பாளராக இணைந்தார். ஆனால், சில பிரச்சினைகளுக்குப் பிறகு இணை தயாரிப்பில் இருந்து அவர் விலகினார்.

இந்தப் படம் தயாராகி நீண்ட நாட்கள் ஆனாலும், இன்னும் ரிலீஸாகவில்லை. சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் ரிலீஸ் கைவிடப்பட்டது. இதற்கிடையில், மூன்றாவதாக ‘நாடக மேடை’ என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார் கார்த்திக் நரேன். ஆனால், அந்தப் படம் தொடங்கப்படவில்லை.

தற்போது, அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் நரேன். இந்தப் படத்தில், ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, வில்லனாக பிரசன்னா நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘மாஃபியா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அருண் விஜய் தற்போது ‘பாக்ஸர்’ படத்தில் நடித்து வருகிறார். பிரபாஸுடன் நடித்த ‘சாஹோ’, விஜய் ஆண்டனியுடன் நடித்த ‘அக்னிச் சிறகுகள்’ ஆகிய படங்கள் அருண் விஜய்யின் ரிலீஸ் பட்டியலில் உள்ளன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close