[X] Close

தமிழ் முகமாகவே ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்வதன் பின்னணி என்ன? - இயக்குநர் அருண் குமார் விளக்கம்


  • kamadenu
  • Posted: 26 May, 2019 12:47 pm
  • அ+ அ-

-சி.காவேரி மாணிக்கம்

‘பண்ணையாரும் பத்மினி’, ‘சேதுபதி’ படங்களைத் தொடர்ந்து எஸ்.யு.அருண் குமார் இயக்கியுள்ள படம் ‘சிந்துபாத்’. இந்தப் படத்திலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியும் சூர்யாவும் சின்னச் சின்னத் திருட்டில் ஈடுபடுபவர்களாக நடித்துள்ளனர். தென்காசி, தாய்லாந்து, மலேசியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

அடுத்த மாதம் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ‘சிந்துபாத்’ குறித்து ‘இந்து தமிழ் திசை’க்குப் பேட்டியளித்த அருண் குமாரிடம், ‘உங்களுடைய படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா நம்பீசன், அஞ்சலி எனத் தமிழ் முகமாகவே ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்வதன் பின்னணி என்ன?' என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “படம் பார்க்கும்போது யதார்த்தமாகத் தெரியவேண்டும், அவ்வளவுதான். கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகர்களை சரியாகத் தேர்ந்தெடுத்து விட்டாலே, 80 சதவீத வேலை முடிந்துவிட்டது. நடிகர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக ஒரு கதாபாத்திரத்தில் பெரிய நடிகர்களைப் புகுத்துவதும் தவறு. கதாபாத்திரத்துக்குச் சம்பந்தமில்லாத சிறிய ஆட்களை நடிக்கவைப்பதும் தவறு.

நான் எப்போதுமே துணை நடிகர்களில் புதுமுகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பேன். ‘சிந்துபாத்’ படத்திலும் நிறைய புதுமுகங்கள் நடித்துள்ளனர். காரணம், அப்போதுதான் படத்தைப் பார்க்கும்போது யதார்த்தமாக இருக்கும்” என விளக்கம் அளித்துள்ளார் அருண் குமார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close