[X] Close

என் மகளை அச்சுறுத்தும் கருத்துகளை எதிர்கொள்வது எப்படி? - மோடிக்கு வாழ்த்து கூறி அனுராக் காஷ்யப் கேள்வி


  • kamadenu
  • Posted: 24 May, 2019 16:58 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

என் மகளை அச்சுறுத்தும் கருத்துகளை எதிர்கொள்வது எப்படி? என்று பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், ஒரு கேள்வியையும் எழுப்பியுள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 348 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 தொகுதிகளை வென்று அறுதிப் பெரும்பான்மை பலத்தை எட்டியது.

இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப் தீவிர மோடி எதிர்ப்பாளர். தற்போது பிரதமராக மோடி பதவியேற்கவுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பதிவில், “அன்பார்ந்த நரேந்திர மோடி சார். உங்கள் வெற்றிக்கு வாழ்த்துகள்.

எல்லோரையும் உள்ளடக்க வேண்டும் என்ற உங்கள் செய்திக்கு நன்றி. சார், அப்படியே, நான் உங்கள் மீது அதிருப்தி உள்ள ஆள். அதனால், எனது மகளை அச்சுறுத்தும் இது போன்ற கருத்துகள் மூலம் உங்கள் வெற்றியைக் கொண்டாடும் ஆட்களை எப்படிக் கையாள்வது என்பதையும் எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதனுடன் தனது மகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாஜக ஆதரவாளர் தெரிவித்த கருத்தின் ஸ்கிரீன் ஷாட்டையும் வெளியிட்டுள்ளார் அனுராக் காஷ்யப்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close