[X] Close

மீண்டும் பிரதமராகும் மோடி: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து


  • kamadenu
  • Posted: 24 May, 2019 16:14 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 23)நடைபெற்றது. தொடக்கம் முதலே பெருவாரியான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இதனால் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதில் இந்திய திரையுலக பிரபலங்கள் மோடிக்கு கூறிய வாழ்த்துகளின் தொகுப்பு:

ஏ.ஆர்.ரஹ்மான்: மக்களவைத் தேர்தலில் வென்ற மதிப்பிற்குரிய நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் வாழ்த்துகள். அற்புதமான, முன்னேற்றப் பாதையில் இருக்கும் ஒற்றுமையான இந்தியாவை எதிர்நோக்கியுள்ளேன்.

அனில் கபூர்: தேசம் பேசிவிட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி ஜி. குடிமக்களாகிய நாங்கள், உங்கள் தலைமை எங்களை எடுத்துச் செல்லும் என்று நம்பிக்கை தரும் புதிய உயரங்களை எதிர்நோக்கியுள்ளோம்.

அர்ஜுன் ராம்பால்: ஒரு அற்புதமான, மாபெரும் வெற்றி. தேசிய ஜனநாயகக் கூட்டணி, பெரிய வித்தியாசத்தில், மக்களின் முதல் தேர்வாக இருக்கிறது. அன்பார்ந்த பிரதமர் நரேந்திர மோடி... மக்களின் நம்பிக்கை உங்களோடு உள்ளது. இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல எனது வாழ்த்துகள். மேடை தயாராக இருக்கிறது. நாங்களும் தான். ஜெய்ஹிந்த்.

மோகன்லால்: மதிப்பிற்குரிய நரேந்திர மோடி ஜி, மனமார்ந்த வாழ்த்துகள்.

சல்மான்கான்: மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி... உங்கள் உறுதியான வெற்றிக்கு என் வாழ்த்துகள். வலுவான இந்தியாவைக் கட்டமைக்க உங்களுடன் நாங்கள் நிற்கிறோம்.

ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன்: வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு, மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உண்மையில் மக்களின் தேர்வு. ஜெய்ஹிந்த்.

கங்கை அமரன்: வாழ்த்துகள் நரேந்திர மோடி ஜி. நமது தேசத்தை உயர்த்த நீங்கள் ஓய்வின்றி உழைத்து வருகிறீர்கள். கடவுள் நம்முடம் இருக்கிறார். உங்கள் தலைமையின் கீழ் இருப்பதில் எங்களுக்குப் பெருமை. மீண்டும் ஒரு சரியான நேரத்தில் மக்கள் உங்களுக்காகக் குரல் கொடுத்துள்ளனர். அமித் ஷா ஜியின் திட்டமிடல் பலன் அளித்துள்ளது.

இயக்குநர் ப்ரியதர்ஷன்: எங்கள் தேசத்தின் சக்தி நீங்கள் தான் நரேந்திர மோடி ஜி. மனமார்ந்த வாழ்த்துகள்.

அக்‌ஷய் குமார்:  மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நமது தேசத்தை முன்னேற்றி சர்வதேச கவனத்தை திருப்ப உங்கள் அனைத்து முயற்சிகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டாவது ஆட்சி  இன்னும் வெற்றிகரமானதாக உங்களுக்கு அமைய வேண்டும் என விரும்புகிறேன்.

நாகார்ஜுனா: மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் வாழ்த்துகள். இந்திய ஜனநாயகம் மீண்டும் வாக்களித்துள்ளது. இந்தியா உயர நீங்கள் வழிநடத்துங்கள்.

காஜல் அகர்வால்: இந்திய ஜனநாயகம் அதன் தீர்ப்பைத் தந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், அற்புதமான வெற்றிக்கு, பெரிய வாழ்த்துகள். நமது நாட்டின் வளர்ச்சி, அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான காலமாக இருக்கும் என நம்புகிறேன்.

கெளதமி: நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்கு அற்புதமான தீர்ப்பு. பிரகாசமான, வெற்றிகரமான இந்தியாவை உருவாக்க நேர்மறை எண்ணத்துடன் முன்னேற்றப் பாதையில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம். இந்தியாவில் இது மக்களின் வெற்றி.

கரண் ஜோஹர்: மக்கள் பேசி விட்டனர். இந்தியா அதன் தலைவரைத் தேர்ந்தெடுத்துவிட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி. அதிமுக்கியமான அலுவலகத்தில், நீங்கள் செய்யும் கடமையில், உங்களுக்கு தொடர் வலிமையும் வெற்றியும் கிடைக்கட்டும். எனது வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.

ரிஷி கபூர்: உரிய வெற்றியைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். பாஜகவுக்கு இந்த தேர்தலில் பரிபூரண வெற்றி.

ரித்தீஷ் தேஷ்முக்: இந்தியா முடிவெடுத்துவிட்டது. ஜனநாயகம் கொண்டாடப்படவேண்டும். இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்.

ராஜ்குமார் ராவ்: இந்த மிகப்பெரிய வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவுக்கும் வாழ்த்துகள். நமது உயர்ந்த தேசத்தை இன்னும் பல உயரங்களுக்கு எடுத்துச் செல்லுங்கள். என் நல்வாழ்த்துகள்.

சங்கர் மகாதேவன்: இந்த அற்புதமான வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த அற்புதமான வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக உழைத்த, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், பாஜகவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close