[X] Close

மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் - திரையுலக நட்சத்திரங்கள் வெற்றி, தோல்வி புள்ளிவிவரங்கள்


  • kamadenu
  • Posted: 24 May, 2019 15:38 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் திரையுலக நட்சத்திரங்கள் வெற்றி, தோல்வி குறித்த முழுமையான புள்ளிவிவரங்கள்

மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. தமிழகத்தில் வேலூர் தொகுதியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீதியுள்ள 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. 

இந்தத் தேர்தலில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் புதிதாக தேர்தல் களம் கண்டனர். அதில் பலரும் தோல்வியை தழுவி ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளனர். இந்தியளவில் திரையுலக நட்சத்திரங்கள் போட்டியிட்ட தொகுதிகள், பெற்ற வாக்குகள் குறித்த பார்வை:

பிரகாஷ்ராஜ்

TH26KRAPRAKASH.jfif 

தனக்கு நெருங்கிய நண்பர் எழுத்தாளர் கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட பிறகு தான் தீவிரமான அரசியல் கருத்துகளைத் தெரிவித்தார். இதனால் பாஜக கட்சியினரிடமிருந்து எதிர்ப்புகளைச் சந்திக்கவே, தேர்தல் களம் காண முடிவு செய்தார். ஆனால், எந்தவொரு கட்சியையும் சாராமல் பெங்களூரு மத்திய தொகுதியில் தனித்து போட்டியிட்டார். இவருக்கு பல்வேறு திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் தோல்வியைத் தழுவினார். ஒட்டுமொத்தமாக 28906 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் பி.சி.மோகன் சுமார் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

சுமலதா

sumalatha.jfif 

தன கணவர் அம்பரீஷின் மறைவுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் தனக்கு மாண்டியா தொகுதியில் சீட் வழங்கப்படும் என நம்பினார் சுமலதா. ஆனால், சீட் மறுக்கப்படவே சுயேட்சையாக களம் கண்டார். மாண்டியா தொகுதியில் அம்பரீஷ் மிகவும் பிரபலம் என்பதால், இவருடைய பிரச்சாரம் மக்களவை வெகுவாக கவர்ந்தது. 7 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார்.

ஊர்மிளா

29BMURMILA-2.jfif 

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையான இவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். மேலும் தனது பிரச்சாரத்தில் பாஜக கட்சியினரை கடுமையாக சாடினார். இறுதியில் 2,41,431 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட  பாஜகவைச் சேர்ந்த கோபால் ஷெட்டி 7,06,678 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது தோல்விக்குப் பிறகு "இந்தத் தோல்வியால் அரசியலிலிருந்து விலகும் எண்ணமில்லை" என்று தெரிவித்துள்ளார் ஊர்மிளா

ஜெயப்பிரதா

4MPjayap2jpg.jfif 

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜெயப்பிரதா, மார்ச் மாதத்தில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் ராம்பூர் மக்களவைத் தொகுதியை ஒதுக்கியது பாஜக. இவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அசாம் கான் போட்டியிட்டார். இவர் ஜெயப்பிரதா குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக எதிரொலித்தது. இதனால், ஜெயப்பிரதா வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்நோக்கினார்கள். அசாம் கானிடம் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தா ஜெயப்பிரதா.

ஹேமமாலினி

PTI2282015000159B.jfif 

பாஜகவைச் சேர்ந்த ஹேமமாலினி, கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட மதுரா தொகுதியிலே இம்முறையும் போட்டியிட்டார். இம்முறையும் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட 2.5 லட்சம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பவன் கல்யாண்

27VJPG4-PAWAN.jfif 

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான் பவன் கல்யாண், நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஜனசேனா கட்சியைத் தொடங்கினார். பிரச்சாரத்துக்குச் சென்ற இடமெல்லாம் கடுமையான கூட்டம் கூடியது. இதனால் இவரது கட்சியினர் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியாக வாக்குகளை பிரிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் பவன் கல்யாணே தோல்வியை தழுவி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். பீமாவரம் தொகுதியில் 8000 வாக்குகள் வித்தியாசத்திலும், காஜுவக்கா தொகுதியில் 14000 வாக்குகள் வித்தியாசத்தில் ஒய்.எஸ்.ஆர் வேட்பாளர்களிடம் தோல்வியடைந்தார். பவன் கல்யாணின் தோல்வி ஆந்திர திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்ருகன் சின்ஹா

vbk-Shatrughan Sinha.jfif

பாஜக கட்சியில் சீட் கிடைக்காததால் உடனடியாக காங்கிரஸ் கட்சிக்கு தாவினார் சத்ருகன் சின்ஹா. பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிட்டார். சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இவரது மகளும், இந்தி திரையுலகின் முன்னணி நடிகையுமான சோனாக்‌ஷி சின்ஹாவும் பிரச்சாரம் செய்தார். அப்படியிருந்தும் பாஜக வேட்பாளர் ரவிசங்கர் பிரசாத்திடம் 2.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

ரவி கிஷன்

DE18--RAVI.jfif 

இந்தி, போஜ்புரி படங்களில் நடித்து பெயர் பெற்றவர் ரவி கிஷன். 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர் 2017-ம் ஆண்டு விலகி பாஜக-வில் இணைந்தார். இம்முறை அவருக்கு உத்திரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நிகில் கெளடா

05BGNIKHILGOWDA.jfif 

கர்நாடகா முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கெளடா. இவர் கன்னடத்தில் நாயகனாக நடித்துள்ளார். மாண்டியா தொகுதியில் அம்பரீஷின் மனைவி சுமலாதாவை எதிர்த்து போட்டியிட்டார் நிகில் கெளடா. 5,76,545 வாக்குகள் பெற்றார். ஆனால், சுமலதாவோ 7 லட்சத்துக்கு அதிகமான வாக்குகள் பெற்று இவரை தோற்கடித்துள்ளார்.

சன்னி தியோல்

vbk-sunny-1.jfif 

இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சன்னி தியோல், ஏப்ரல் 23-ம் தேதி பாஜகவில் இணைந்தார். இவருக்கு பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. சில திரையுலகினரும் இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்கள். எழுபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றுள்ளார். நேற்று (மே 23) வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது கூட இவரது பெயர் ட்ரெண்ட்டானது. ஏனென்றால், நேற்றைய விவாதத்தின் போது சன்னி தியோலுக்கு பதிலாக சன்னி லியோன் என்று பெயரை மாற்றிக் கூறினார் அர்னாப். இதனைக் கிண்டல் செய்யும் வகையில் சன்னி லியோனும் "எத்தனை வாக்குகள் முன்னிலை" என்று ட்வீட் செய்திருந்தார்.

மன்சூர் அலிகான்

48ea1288P2133326mrjpg.jfif 

தமிழ் சினிமாவில் பல முன்னணி நாயகர்களுக்கு வில்லனாக நடித்தவர் மன்சூர் அலிகான். ஆனால், தற்போது சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நாம் தமிழர் கட்சியில் இணைந்து அரசியல் களம் கண்டார். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இவருக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு பிரச்சாரத்தின் போது புரோட்டா போடுவது, டீ போடுவது, குழந்தையை தாலாட்டி தூங்க வைப்பது, காய்கறி விற்பது என இவர் செய்த புகைப்படங்கள் மீம்ஸ் கலைஞர்களுக்கு விருந்தாக அமைந்தது. பல்வேறு பிரச்சார யுத்திகளைக் கையாண்டும் இவரால் 54957 வாக்குகளே பெற முடிந்தது. கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரான சுதாகரனை விட வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார் என்ற வேண்டுமானால் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

சினேகன்

1jpg.jfif 

தமிழ் திரையுலகில் பல்வேறு வரவேற்புப் பெற்ற பாடல்களை எழுதியவர் சினேகன். பிக் பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டு, தான் கமலுக்கு தீவிரமான ரசிகன் என்று கூறினார். இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்தார். பிறகு கமல் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார். சிவகங்கை மக்களவைத் தொகுதி இவருக்கு ஒதுக்கப்பட்டது. 22,931 வாக்குகள் மட்டுமே இவரால் பெற முடிந்துள்ளது. இந்தத் தொகுதியில் சுமார் 52% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் கார்த்தி சிதம்பரம்.

பவர் ஸ்டார் சீனிவாசன்

download-6jpg.jfif 

தமிழ் சினிமாவில் சில படங்கள் நாயகனாக நடித்தார். அதற்குப் பிறகு காமெடியனாக நடிக்கத் தொடங்கினார். செக் மோசடி வழக்கு தொடங்கி பல்வேறு வழக்குகளில் சிக்கினார். இறுதியாக இந்திய குடியரசு கட்சியில் இணைந்து தென் சென்னையில் போட்டியிட்டார். மொத்தமே 670 வாக்குகளே பெற்று படுதோல்வியை தழுவியுள்ளார்

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close