[X] Close

தமிழகத்தில் திமுக பெருவாரியாக வெற்றி: ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து


  • kamadenu
  • Posted: 24 May, 2019 10:52 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

தமிழகத்தில் திமுக பெருவாரியாக வெற்றி பெற்றிருப்பதற்கு, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 23) காலை 8 மணிக்குத் தொடங்கியது. தொடக்கம் முதலே பெருவாரியான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

தமிழகத்தில் 37 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றுள்ளது திமுக கூட்டணி. இந்த மாபெரும் வெற்றிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினி. இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், “பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துக்கும் விதமாக மு.க.ஸ்டாலின், ரஜினியின் ட்வீட்டைக் குறிப்பிட்டு “தங்களின் வாழ்த்துகளுக்கு அன்பும்! நன்றியும்! ” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்பாக தனிப்பெரும்பானையுடன் ஆட்சியைப் பிடித்து மீண்டும் பிரதமராக பதிவியேற்கவுள்ள மோடிக்கும் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருப்பது நினைவுக் கூறத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close