[X] Close

#GoBackModi ஹேஷ்டேக் உருவாக்கியவர்கள் முகத்தில் கரி: காயத்ரி ரகுராம் சாடல்


gobackmodi

  • kamadenu
  • Posted: 23 May, 2019 20:53 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

#GoBackModi ஹேஷ்டேக் உருவாக்கியவர்கள் முகத்தில் கரி என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) காலை 8 மணிக்குத் தொடங்கியது. இந்திய அளவில் 300-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று பாஜக 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும், தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலுமே பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது. இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், “#GoBackModi என ஹேஷ்டேக் உருவாக்கியவர்கள் முகத்தில் கரி. ராகுல் காந்தி எங்கே? அதற்குள் லண்டனுக்குச் சென்று விட்டாரா? #RunAwayRahulgandhi தான் ஹேஷ்டேக் என நினைக்கிறேன்.

எங்கே தமிழக பாஜக? நாம் நமது வாக்கு விகிதத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறோம். இது 2021-ல் நிரூபணமாகும். திமுக இன்னும் நன்றாகச் செயல்பட வேண்டும். 2021-ல் எடப்பாடி அவர்கள் வெற்றி பெறுவார். பொய்களால் கண் மறைக்கப்பட்டவர்கள் விரைவில் உணர்வார்கள். ஐபோன் தயாரிப்பு, சீனாவிலிருந்து தமிழகத்துக்கு மாறியது. இன்னும் பல தயாரிப்பும் மாறியது. இதற்குக் காரணம் நரேந்திர மோடி” என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close