[X] Close

தமிழ்நாட்டில் பெருமையை இழந்துவிட்டோம்: பாஜக பின்னடைவு குறித்து காயத்ரி ரகுராம் கருத்து


  • kamadenu
  • Posted: 23 May, 2019 10:47 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

தமிழ்நாட்டில் பெருமையை இழந்துவிட்டோம் என்று பாஜக பின்னடைவு குறித்து காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. காலை 10:30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 326 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 106 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

தமிழகத்தில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி கட்சியினர் 2 தொகுதிகள் மட்டுமே முன்னிலையில் இருக்கிறார்கள். பாஜக பின்னடைவு குறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், “கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரியில் பாஜகவினர் முடிந்தவரை சிறப்பாகப் பணியாற்றியதையும் மீறி பின்னடைவு வருத்தமே.

தமிழ்நாட்டில் நாம் பெருமையை இழந்துவிட்டோம் என்றே சொல்ல முடியும். பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் இருவருமே நல்லவர்கள். நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் காயத்ரி ரகுராம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், திமுக முன்னிலையில் இருப்பது தொடர்பாக காயத்ரி ரகுராம், “யூகித்ததைப் போல திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி. வாழ்த்துகள். 2021-க்காக அவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்களா? காத்திருந்து பார்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close