[X] Close

முதல்முறை வாக்களித்தவர்கள் யாரை நம்புகிறார்கள் என்பதை முடிவுகள் சொல்லும்: சேகர் கபூர் கருத்து


  • kamadenu
  • Posted: 23 May, 2019 10:35 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

முதல்முறை வாக்களித்தவர்கள் யாரை நம்புகிறார்கள் என்பதை முடிவுகள் சொல்லும் என்று சேகர் கபூர் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. காலை 10:15 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 319 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 116 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து பாலிவுட் நடிகர் சேகர் கபூர் தனது ட்விட்டர் பதிவில், “இந்திய வாக்காளர்களுக்கு சொந்த புத்தி இருக்கும் என்பதை நம்ப இந்த உலகம் தயாராக இல்லையோ? நான் படித்துக் கொண்டிருக்கும் குப்பைகள், அவர்கள் ஏதோ ஆட்டு மந்தைக் கூட்டத்தைப் போல காட்டுகின்றனர்.

நம் நாட்டில் 85 மில்லியன் வாக்காளர்கள் முதல்முறை வாக்களித்தவர்கள். நல்ல எதிர்காலத்துக்காக வாக்களித்துள்ளனர். முடிவுகள், அவர்கள் யாரை நம்புகிறார்கள் என்பதைச் சொல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close