[X] Close

மோடிக்கு 2-வது வாய்ப்பு கிடைக்கவில்லையெனில்... - சித்தார்த்


2

  • kamadenu
  • Posted: 23 May, 2019 09:30 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

மோடிக்கு 2-வது வாய்ப்பு கிடைக்கவில்லையெனில், தனது ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக அழித்து விடுவதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. காலை 9:15 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 271 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 104 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில், “மோடிஜிக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கவில்லையெனில், நான் என் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக அழித்து விடுவேன் என்று உறுதி கூறுகிறேன். ஜெய் ஹிந்த்” என தெரிவித்துள்ளார்.

கடந்த பல மாதங்களாக பிரதமர் மோடியின் பேச்சைக் கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்து வந்தவர் நடிகர் சித்தார்த். தற்போது பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்துவரும் நிலையில், சித்தார்த் இவ்வாறு ட்வீட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close