[X] Close

த்ரிஷாவின் ‘ராங்கி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு


  • kamadenu
  • Posted: 22 May, 2019 18:41 pm
  • அ+ அ-

சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் இவர். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க, ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இவன் வேற மாதிரி’ மற்றும் ‘வலியவன்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய சரவணன், கன்னடத்தில் ‘சக்ரவியுகா’ என்ற படத்தை இயக்கினார்.

சாலை விபத்தில் சிக்கி சில காலம் ஓய்வில் இருந்த சரவணன், தற்போது பழைய நிலைக்குத் திரும்பியுள்ளார். அவருக்கு உதவும் விதமாக, தான் உருவாக்கி வைத்திருந்த கதையைக் கொடுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தக் கதையில், முதன்மைக் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘ராங்கி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சத்யா இசையமைக்கிறார். இதன் பூஜை, கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், இன்று (மே 22) இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வெளிநாட்டு போலீஸாரால் த்ரிஷா கைது செய்யப்படுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 


 

 
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close