[X] Close

சூர்யாவின் ‘என்.ஜி.கே.’ படத்துக்கு யு சான்றிதழ்


  • kamadenu
  • Posted: 22 May, 2019 17:33 pm
  • அ+ அ-

சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே.’ படத்துக்கு, தணிக்கை வாரியம் யு சான்றிதழ் கொடுத்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘என்.ஜி.கே’. நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே’. இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது. பொலிட்டிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வருகிற 31-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸாகிறது. தமிழில் உருவாகியுள்ள இந்தப் படம், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. சூர்யா - செல்வராகவன் - யுவன் கூட்டணி என்பதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

‘மெர்சல்’ மற்றும் ‘காலா’ படங்களைப் போல் ‘என்.ஜி.கே.’ படத்துக்கும் ட்விட்டர் எமோஜி, கேரளாவில் பெண் ரசிகைகளுக்கு தனி ஷோ என நாளுக்கு நாள் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்நிலையில், படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், படத்துக்கு யு சான்றிதழ் அளித்துள்ளனர். வருகிற 31-ம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close