[X] Close

என்னுடைய கடந்த கால உறவுகள் எல்லாமே நீண்ட நாட்கள் இருந்தவை: ஐஸ்வர்யா ராஜேஷ்


  • kamadenu
  • Posted: 22 May, 2019 14:59 pm
  • அ+ அ-

எனது கடந்த கால உறவுகள் எதுவும் சில மாதங்கள் மட்டுமே இருந்தது கிடையாது. எல்லாமே நீண்ட நாட்கள் இருந்தவை எனத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கடந்த 10-ம் தேதி, திரையுலகைச் சேர்ந்த ஒருவரை ஐஸ்வர்யா ராஜேஷ் காதலித்து வருவதாகவும், அவருடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்தச் செய்தி தொடர்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பதிவில், “மக்களே... நான் எனது காதல் வதந்திகள் பற்றிக் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அந்தக் காதலன் யார் என்று எனக்கும் சொல்லுங்கள். தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இப்படியான பொய்ச் செய்திகளைப் பரப்புவதைத் தயவுசெய்து நிறுத்துங்கள். அப்படி ஏதாவது நடந்தால், உங்களுக்கு அதைச் சொல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். நான் தனியாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “அந்த வதந்தி, ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில் ஆரம்பித்தது என நினைக்கிறேன். அதைப் புறக்கணித்து விடலாமென நினைத்தேன். ஆனால், அது பெரிதாகிக்கொண்டே போனதால் பதில் சொல்ல வேண்டியதாகி விட்டது.

நான் யாருடனாவது வெளியில் சென்றபோது, யாரோ அதைப் பார்த்து அந்த வதந்தியை உருவாக்கி இருக்கலாம். என் சக நடிகர்கள் யாருடனும் நான் நெருக்கமாக இல்லை. அனைவருக்கும் திருமணமாகி, குழந்தை இருக்கிறது. அனைவரும் நல்ல நண்பர்கள். யாரையும் காதல் செய்ய எனக்கு நேரமில்லை, அப்படியான நபரை நான் இன்னும் சந்திக்கவும் இல்லை.

‘பரிசோதனை செய்து பார்ப்போமே’ என எல்லாவற்றையும் செய்யும் ஆள் நான் இல்லை. உறவு என்பது நான் மிகவும் போற்றக்கூடிய ஒன்று, நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது. எனது கடந்த கால உறவுகள் எதுவும் சில மாதங்கள் மட்டுமே இருந்தது கிடையாது. எல்லாமே நீண்ட நாட்கள் இருந்தவை” எனத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close