[X] Close

நஷ்டம் என்று தெரிந்தும் பண்ணதுக்குக் காரணம், இந்தப் படம் செத்துவிடக் கூடாது: ரவீந்தர் சந்திரசேகரன்


  • kamadenu
  • Posted: 22 May, 2019 14:37 pm
  • அ+ அ-

நஷ்டம் என்று தெரிந்தும் பண்ணதுக்குக் காரணம், இந்தப் படம் செத்துவிடக் கூடாது என எமோஷனலாகப் பேசியுள்ளார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.

சிவா அரவிந்த் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’. கவின், ரம்யா நம்பீசன், ராஜு, அருண்ராஜா காமராஜ், இளவரசு, அழகம் பெருமாள், ஆடுகளம் நரேன், மன்சூரலிகான் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இதன் நன்றி அறிவிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், “இந்தப் படத்தின்வெற்றி என்னவென்றால், படத்தைப் பார்த்த யாருமே ‘நன்றாக இல்லை’ எனச் சொல்லவில்லை. வெளிநாட்டு உரிமை, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை என எந்த வியாபாரமுமே ஆகாமல், பத்திரிகையாளர்கள் மற்றும் மக்களை நம்பி ரிலீஸ் செய்ததுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

பணத்தை நான் அடுத்த படத்தில் சம்பாதித்துக் கொள்வேன். ஆனால், அடுத்த படமும் தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் இங்கு நிறைய உள்ளன. ஏனென்றால், இங்கு வியாபார நோக்கமே வேறு. புது ஹீரோதான் வேண்டும் என்று படமெடுத்தால், எனக்கு என்ன படம் காண்பிக்க வேண்டுமோ, அதை அவர்கள் (வியாபாரம் தொடர்பானவர்கள்) காண்பித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

‘நீ என்ன முட்டாளா? இந்தப் படத்தை இப்படி புரமோஷன் பண்ற?’ என்று என்னிடம் ஒருவர் கேட்டார். இப்படி புரமோஷன் பண்ணதுனாலத்தான் இது 3 வருட படமென யாருக்கும் தெரியவில்லை. புரமோஷனில் போடும் பணத்தில் இருந்து ஒரு பைசா திரும்பி வராதென்று பணம் போடும் எனக்குத் தெரியாதா? இந்தப் படம் நஷ்டம் என்று தெரிந்தும் பண்ணதுக்குக் காரணம், இந்தப் படம் செத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். ‘நீ படத்தை மட்டும் ஒழுங்கா எடு. நான் எப்படியும் படத்தை வெளியில் கொண்டு வருகிறேன்’ என நான் இந்த இயக்குநருக்கு வாக்குக் கொடுத்திருக்கேன்.

Natpunaa Ennanu Theriyumaa Thanks Giving Meet Stills (3).JPG 

இயக்குநருக்கே ஒருகட்டத்தில் என்மேல் நம்பிக்கை இல்லை. அதுக்குக் காரணம், அவன் ஒரு குழந்தை மாதிரி. 10 பேர் அவனை ஈசியா குழப்பி விடலாம். ஒரு ஆள் என்னை நம்பினான் என்றால், அது ராஜு மட்டும்தான். என்னை மாதிரி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு, கண்டிப்பாக மோட்டிவேஷன் தேவை. ‘நாம் ஜெயிச்சிடலாம் சார், விட்டுடாதீங்க’ என தினமும் மெசேஜ் அனுப்புவான்.

இந்தப் படம் நஷ்டம் என்பது எனக்குப் பெரிய விஷயம் கிடையாது. ஒரு குறும்படத்தை ரிலீஸ் செய்வதுபோல், இந்தப் பெரிய படத்தைக் கொஞ்சம் பெரிய தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணிருக்கேன், அவ்வளவுதான். தோற்று தோற்று... ஒருநாள் நீங்கள் நினைக்கும் வெற்றிகரமான தயாரிப்பாளராக வருவேன்” என்று எமோஷனலாகப் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close