[X] Close

தன்னுடைய முதல் ஹீரோவின் இயக்கத்தில் சமந்தா


  • kamadenu
  • Posted: 21 May, 2019 19:24 pm
  • அ+ அ-

சமந்தா தமிழில் முதன்முதலாக ஒப்பந்தமான தமிழ்ப் படம் ‘மாஸ்கோவின் காவேரி’. ரவி வர்மன் இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோவாக ராகுல் ரவீந்திரன் நடித்தார். சந்தானம், சீமான், ரோகிணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

ஆனால், இந்தப் படம் ரிலீஸாவது தாமதமானதால், சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடித்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ முதலில் ரிலீஸானது. அதனைத் தொடர்ந்து அதர்வா ஜோடியாக சமந்தா நடித்த ‘பாணா காத்தாடி’ ரிலீஸாக, மூன்றாவதாகத்தான் ‘மாஸ்கோவின் காவேரி’ ரிலீஸானது.

முதல் வருடத்திலேயே மூன்று தமிழ்ப் படங்கள் ரிலீஸ் என்ற பெருமையைப் பெற்றார் சமந்தா. அதன்பிறகு, கடந்த வருடம் (2018) ரிலீஸான ‘யு டர்ன்’ படத்தில் சமந்தா - ராகுல் ரவீந்திரன் இருவரும் ஜோடியாக நடித்தனர்.

இந்நிலையில், ராகுல் ரவீந்திரன் இயக்கிவரும் ‘மன்மதுடு 2’ தெலுங்குப் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் சமந்தா. நாகர்ஜுனா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். கடந்த மார்ச் 25-ம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கியது.

rahul.jpg 

இந்நிலையில், நாகர்ஜுனா - சமந்தா சம்பந்தப்பட்டக் காட்சியின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த நாகர்ஜுனா, “சமந்தாவுடன் நடிப்பது மகிழ்ச்சிகரமான விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.

அதை ரீ ட்வீட் செய்த ராகுல் ரவீந்திரன், “என்னுடன் முதன்முதலில் சேர்ந்து நடித்தவரை இயக்குவது என்பது பழைய நினைவுகளைக் கிளறுவதாக அமைந்தது. நீங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதைப் பார்ப்பது எனக்கு முழு மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

‘மாஸ்கோவின் காவேரி’, ‘வணக்கம் சென்னை’, ‘யு டர்ன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ராகுல் ரவீந்திரன், ‘சி லா சௌ’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ‘மன்மதுடு 2’, இயக்குநராக அவருக்கு இரண்டாவது படம். இவர், பிரபல பின்னணிப் பாடகி சின்மயி கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close