[X] Close

‘7-ம் அறிவு’ வில்லனிடம் பயிற்சிபெறும் அருண் விஜய்


7

  • kamadenu
  • Posted: 21 May, 2019 18:26 pm
  • அ+ அ-

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக ரிலீஸான படம் ‘தடம்’. மகிழ் திருமேனி இயக்கிய இந்தப் படம், ஆக்‌ஷன் த்ரில்லர் வகையைச் சார்ந்தது. கடந்த மார்ச் மாதம் ரிலீஸான இந்தப் படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள ‘சாஹோ’ படத்திலும், ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கியுள்ள ‘அக்னிச் சிறகுகள்’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அருண் விஜய். இந்தப் படங்களின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது ‘பாக்ஸர்’ படத்துக்காகத் தன்னைத் தயார் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் அருண் விஜய். பாலாவிடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விவேக் இந்தப் படத்தை இயக்குகிறார். அருண் விஜய் ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்காக, ஜானி ட்ரி நக்யென்னிடம் தற்காப்புக் கலைகளைக் கற்று வருகிறார் அருண் விஜய். இதற்காக வியட்நாம் சென்றுள்ள அருண் விஜய், அங்கு தங்கி தற்காப்புக் கலைகளைக் கற்று வருகிறார். ஜானி ட்ரி நக்யென், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘7-ம் அறிவு’ படத்திலும், அதர்வா நடிப்பிலும் வெளியான ‘இரும்புக்குதிரை’ படத்திலும் வில்லனாக நடித்தவர்.

இந்நிலையில், ஜானி ட்ரி நக்யென்னுடன் எடுத்த புகைப்படத்தை, ‘மாஸ்டர்’ எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் அருண் விஜய்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close