[X] Close

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் சாந்தினி


  • kamadenu
  • Posted: 21 May, 2019 14:07 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

பாலாஜி சக்திவேல் இயக்கிவரும் புதிய படத்தில், சாந்தினி தமிழரசன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இசக்கி கிஷோர், அஜய் குமார், சுபிக்‌ஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யார் இவர்கள்'. பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள இப்படத்தை, இசக்கி துரை தயாரித்துள்ளார். இதன் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டாலும், சரியான வெளியீட்டுத் தேதிக்காகக் காத்திருக்கிறது.

தற்போது வெற்றிமாறன் இயக்கிவரும் 'அசுரன்' படத்தில், வில்லத்தனமான காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் பாலாஜி சக்திவேல். அவர் நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

இந்நிலையில், சத்தமின்றி தனது புதிய படத்தின் படப்பிடிப்பை சுமார் 90% முடித்துள்ளார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். அதில், புதுமுகம் ஒருவர் நாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் நாயகியாக நடித்துள்ளார். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது. முழுக்க நாயகியை மையப்படுத்தியே நகரும் இக்கதையில், மேக்கப் இல்லாமல் நடித்திருப்பதாக சாந்தினி அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'யார் இவர்கள்' படத்துக்கு முன்பாக பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான 'ரா... ரா... ராஜசேகர்' படமும் வெளியீட்டுச் சிக்கலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close