[X] Close

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ பற்றி தமிழ் சினிமா பிரபலங்கள் பாராட்டு


  • kamadenu
  • Posted: 21 May, 2019 14:04 pm
  • அ+ அ-

உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களால் கொண்டாடப்படும் வெப் சீரிஸ் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. கடந்த 2011-ம் ஆண்டு இந்தத் தொடரின் முதல் சீஸன் வெளியானது. கடந்த 9 ஆண்டுகளில் 8 சீஸன்களாக வெளியாகி, தன்னுடைய பயணத்தைத் தற்போது முடித்துக் கொண்டுள்ளது.

தற்போது  8-வது சீஸனின் முதல் எபிஸோட், கடந்த மாதம் (ஏப்ரல்) 14-ம் தேதி ஒளிபரப்பானது. மொத்தம் 6 எபிஸோடுகள் கொண்ட இந்த சீஸன், நேற்றுடன் (மே 20) முடிவடைந்தது. இந்த சீஸன் தொடங்கியபோது, முந்தைய சீஸன்களைப் போல இல்லை என ரசிகர்கள் குரல் எழுப்பினர்.

‘தகுதியான இயக்குநர்களைக் கொண்டு இந்த சீஸனை மறுபடியும் எடுக்க வேண்டும்’ என சுமார் 2 லட்சம் பேர் எச்பிஓ நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், எல்லாவற்றையும் மறக்கடிக்கும் வகையில் நேற்று வெளியான கடைசி எபிஸோட், ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா பிரபலங்களும் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ பற்றி ட்விட்டரில் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

தனுஷ்: ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீஸன் 8 தந்த, முக்கியமாக கடைசி பகுதி தந்த கலவையான உணர்ச்சிகளையும் தாண்டி, இவ்வளவு வருடங்கள் இந்தத் தொடரைப் பார்த்து இப்போது விடைபெறுவது கடினமாக இருக்கிறது. கண்டிப்பாக ஒரு சகாப்தத்தின் முடிவு. பொழுதுபோக்கிலும் திரைக்கதையிலும் புதிய (உயர்ந்த) தரத்தைக் கொண்டுவந்த குழுவுக்கு நன்றி.

த்ரிஷா: ஏன் சில கதாபாத்திரங்களை இவ்வளவு தூரம் வளர்த்துவிட்டு, பின்னர் ‘எதற்காக இப்படி?’ என நாம் ஆச்சரியப்படவைக்கும் அளவுக்கு அதை அப்படியே விடவேண்டும். என்ன இருந்தாலும், சிறந்த நடிகர்கள், காட்சியமைப்பு, இசை, மிக அற்புதமாக எழுதப்பட்ட காட்சிகள் என ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ எப்போதும் ஒரு கல்ட் தொடராக இருக்கும். கண்டிப்பாக என்றும் என் நினைவில் இருக்கும்.

வரலட்சுமி சரத்குமார்: என்ன ஒரு அற்புதமான தொடர். இந்தத் தொடர் முடிவதில் அதிக வருத்தமே. ஆனால், முடிந்துவிட்டது. ட்ராகன்கள் மற்றும் மாயாஜால உலகத்துக்கே நம்மை அழைத்துச் சென்ற இந்த அற்புதமான தொடரை உருவாக்கியவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இந்தக் கதாபாத்திரங்கள் எப்போதும் நினைவில் இருக்கும். அனைத்துக் கதாபாத்திரங்களையும் நான் விரும்புகிறேன்.

இயக்குநர் அறிவழகன்: யார் அரியணையில் ஏறுவார்? எனது ஊகம் சரியானது. ஆனால், புதுமையான, இறுதிக்காட்சிகளைப் போன்ற தருணங்கள் எல்லாம், இந்தப் பகுதிகளால் தொலைந்துவிட்டன. ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’க்குப் பின்னால் இருந்த தத்துவம் சரியானது. என்னைப் பாதித்தது. ஆனால், கடைசி பகுதி காட்டிய வகையில் அல்ல.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close