[X] Close

அஜித் - எச்.வினோத் கூட்டணியில் இணையும் ஜிப்ரான்?


  • kamadenu
  • Posted: 21 May, 2019 10:26 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரியவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'நேர்கொண்ட பார்வை'. வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.  இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காகும். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைத்துள்ளார்.

இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க அஜித் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தையும் போனி கபூரே தயாரிக்கவுள்ளார்.

'நேர்கொண்ட பார்வை' படத்தின் இறுதிகட்டப் பணிகளுக்கு இடையே, புதிய படத்துக்காக திரைக்கதை வடிவத்தையும் எழுதி வருகிறார் எச்.வினோத். இப்படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிவார் என்று தெரிகிறது.

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் பணிபுரிந்ததிலிருந்தே எச்.வினோத் - ஜிப்ரான் இருவருமே நெருங்கிய நண்பர்கள். 'நேர்கொண்ட பார்வை' படத்துக்கே முதலில் ஜிப்ரானை தான் சிபாரிசு செய்தார் எச்.வினோத். ஆனால், சில காரணங்களால் அது நடைபெறவில்லை. தற்போது தனது புதிய படத்துக்கு ஜிப்ரான் தான் இசையமைக்க வேண்டும் என்பதில் எச்.வினோத் தீவிரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு தயாரிப்பு நிறுவனமும் சம்மதம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை சந்தித்து பேசியுள்ளார் ஜிப்ரான். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு புகழ்ந்து தள்ளியது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close