[X] Close

உங்களுக்குப் பிடித்த சிஎஸ்கே வீரர் யார்? - சுரேஷ் ரெய்னாவின் கேள்விக்கு சூர்யா பதில்


  • kamadenu
  • Posted: 20 May, 2019 19:02 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

உங்களுக்குப் பிடித்த சிஎஸ்கே வீரர் யார் என்று சுரேஷ் ரெய்னா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ளார் சூர்யா.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'என்.ஜி.கே'. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. மே 31-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது படக்குழு.

இந்நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் பொருட்டு சமூக வலைதளங்களில் #AskSuriya என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சூர்யா பதிலளித்தார். ரசிகர்கள் கேள்வியை ஒருவர் சூர்யாவிடம் கேட்க, அவர் வீடியோ வடிவில் பதிலளித்து வந்தார்.

அப்போது, “நீங்கள் ஆச்சர்யப்படும் விருந்தினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் சுரேஷ் ரெய்னா” என்று கூறினார். அதற்கு சூர்யா, "என்ன சொல்கிறீர்கள்? மாப்ள... அவரை எப்போதும் அப்படித்தான் அழைப்பேன்" என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, “உங்களுக்குப் பிடித்த சிஎஸ்கே வீரர் யார்?” என்று சுரேஷ் ரெய்னா கேட்டிருப்பதாகத் தொகுப்பாளர் தெரிவித்தார். அதற்கு சூர்யா, “என்னால் நம்ப முடியவில்லை. உங்களுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா..? ரொம்ப நன்றி. உங்கள் வீட்டில் இருக்கும் மகள் உள்ளிட்ட அனைவருக்கும் என் அன்பைத் தெரிவித்துக் கொள்ளுங்கள்.

என்னால் ஒருதலைப்பட்சமாகச் சொல்ல முடியாது. ஆனாலும், நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். தோனி. நான் முதன்முதலில் அவரைச் சந்திக்கும் வாய்ப்புதான் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் உங்களைச் சந்தித்தேன். நீங்களே வந்து முதலில் என்னிடம் பேசினீர்கள். உங்கள் அன்புக்கும் பெருந்தன்மைக்கும்  நன்றி.

நாம் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்னும் இனிமையுடன் நினைவு கூறுகிறேன். கடந்த ஐபிஎல் போட்டிகளை ரசித்தேன். எப்போதுமே நான் சிஎஸ்கே ரசிகன்” என்று பதிலளித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close