[X] Close

தனுஷின் ‘பக்கிரி’: ஜூன் 21-ம் தேதி ரிலீஸ்


21

  • kamadenu
  • Posted: 20 May, 2019 18:21 pm
  • அ+ அ-

தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம், தமிழில் ‘பக்கிரி’ என்ற பெயரில் ரிலீஸாகிறது.

தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’. கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தயாரானது. காமெடி அட்வெஞ்சரான இந்தப் படம், கடந்த வருடம் (2018) மே 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டது. அமித் திரிவேதி பாடல்களுக்கு இசையமைக்க, நிகோலஸ் எறேரா பின்னணி இசையமைத்தார்.

இந்தப் படத்தைத் தமிழிலும் வெளியிட கடந்த வருடமே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’ என்ற பெயரில் வெளியிட முடிவெடுத்து, ஃபர்ஸ்ட் லுக்கை கடந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டார் தனுஷ். ஆனால், என்ன ஆனதோ தெரியவில்லை. படம் தமிழில் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில், ஒய் நாட் எக்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தமிழில் வெளியிடுகிறது. ‘பக்கிரி’ என்ற தலைப்பில் வெளியிடுகின்றனர். மதன் கார்க்கி, தமிழில் பாடல்கள் எழுதியுள்ளார். அடுத்த மாதம் (ஜூன்) 21-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

“ ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’ படம் இந்தியாவில் ரிலீஸாவது எனக்குப் பெருமையாக இருக்கிறது. கடினமாக உழைக்கவும், வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளவும் என்னை ஊக்குவிக்கும் எனது ரசிகர்களிடம் இதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் தனுஷ்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close