[X] Close

25 வருடங்களாக இதைத் தவறவிட்டுவிட்டேன்: குற்ற உணர்வில் எஸ்.ஜே.சூர்யா


25

  • kamadenu
  • Posted: 20 May, 2019 17:38 pm
  • அ+ அ-

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘மான்ஸ்டர்’. நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். நிஜ எலியை வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்துக்கான தியேட்டர்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று (மே 20) பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் எஸ்.ஜே.சூர்யா.

அதில் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது:

 “ ‘மான்ஸ்டர்’ படத்தை, மக்களோடு மக்களாகத் திரையரங்கில் சென்று பார்த்தேன். ‘இறைவி’ படக்குழுவினரும், பாபி சிம்ஹாவும் குடும்பத்தோடு வந்திருந்தனர். அவருடைய குழந்தை மட்டுமின்றி, அங்கு வந்திருந்த அத்தனைக் குழந்தைகளும் எலி வரும் காட்சிகளில் ஆளுக்கொரு விதமாக ஓசை எழுப்பி உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

ஒரு நடிகனாக வெற்றியடைய வேண்டும் என்ற என் எண்ணம், 25 ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பிறகு நிறைவேறியிருக்கிறது. இந்தப் புதுப்பயணம் தொடரும். என் படத்தைக் குடும்பத்தோடு வந்து பார்க்கும்போது, இத்தனை நாள் இதைத் தவறவிட்டோமே என்ற குற்றவுணர்வு வருகிறது. இத்தனை ஆண்டுகளாக நான் ஏன் இதைச் செய்யவில்லை? என்று தோன்றியது. எலியால் தொடங்கிய இந்தப் பயணத்தை, இதேபோல் அடுத்தடுத்து நல்ல படங்களில் நடித்து தொடர ஏங்கிக் கொண்டிருக்கிறேன். நல்ல வாய்ப்பு என்னைத்தேடி வரும் என்றும் நம்புகிறேன்.

என் படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும். ஆனால், ‘இறைவி’யில் இருந்து அது மாறியிருக்கிறது. என்னை நம்பி தரமான பாத்திரம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி. ராஜு முருகன், இப்படம் ‘ஜென்’ கதையைப் படமாக எடுத்ததுபோல் இருக்கிறது என்று கூறினார்.

நான் சாதாரண வாழ்க்கைதான் வாழ விரும்புகிறேன். எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கிவில்லையென்றால், என் கையில் இருக்கும் கதையைக் கொண்டு நானே நடிப்பேன்.

அமிதாப் பச்சன் சார், ஒரு காட்சியை ஒரே டேக்கில் நடித்து விடுவார். ஒரு எக்ஸ்ட்ரா டேக் கூட வாங்கமாட்டார். ஒவ்வொரு காட்சியையும் முதல் வாய்ப்பாகக் கருதி நடித்துவிடுவார். 59 ஆண்டுகளாக அவர் வெற்றியின் ரகசியம் இதுதான். விஜய், அஜித் இருவருமே எந்த முடிவெடுத்தாலும், அதைச் சரியாக செய்து வெற்றியடையக் கூடியவர்கள். அது அரசியலாக இருந்தாலும் சரி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி... இருவருக்கும் வெற்றிபெறும் வல்லமை இருக்கிறது.”

இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close