[X] Close

நெட்ஃபிளிக்ஸ் நிகழ்ச்சியில் ஷாரூக் கான்: ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் நன்றி


  • kamadenu
  • Posted: 18 May, 2019 14:48 pm
  • அ+ அ-

டேவிட் லெட்டர்மேனின் நிகழ்ச்சியில் நடிகர் ஷாரூக் கான் தோன்றவுள்ளார். இந்த நிகழ்ச்சி பிரத்யேகமாக நெட்ஃபிளிக்சில் மட்டுமே பார்க்கக் கிடைக்கும்.

அமெரிக்காவின் மிகப் பிரபலமான தொலைக்காட்சி ஆளுமை டேவிட் லெட்டர்மேன். இவரது பின்னிரவு பேட்டிகளுக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்டுஹ் வழங்கியுள்ளார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின், நெட்ஃபிளிக்ஸ் தளத்துக்காக, 'My Next Guest Needs No Introduction with David Letterman' என்கிற டாக் ஷோவை வழங்கவுள்ளார்.

இதில் எஃப் 1 ரேஸ் கார் சாம்பியன் ஹாமில்டன், பில்கேட்ஸ் மனைவி மெலிண்டா கேட்ஸ், பாடகர் கான்யேஎ வெஸ்ட் என பல சர்வதேசப் பிரபலங்களை லெட்டர்மேன் பேட்டியெடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து கலந்துகொண்டுள்ள ஒரே பிரபலம் நடிகர் ஷாரூக் கான் மட்டுமே. இதற்கான படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நடந்ததாகத் தெரிகிறது.

இது பற்றி ஷாரூக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், "பேட்மேன், ஸ்பைடர்மேனுக்கு முன்னாலிருந்தே திரு லெட்டர்மேன் இருந்துள்ளார். உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. நீங்கள் என்னை பேட்டி எடுத்ததை ரசித்தேன். என்னைப் பற்றி பேச முடிந்ததால் அல்ல. நீங்கள் கனிவுடன் நடத்தை நான், நானாக இருக்கமுடியும் என்பதை உணரவைத்தீர்கள். நீங்கள் ஒரு உந்துசக்தி சார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நெட்ஃபிளிக்ஸுடன் ஷாரூக் கான் இணைந்து தயாரிக்கும் Bard on the Blood தொடரை ஷாரூக்கான் இந்த நிகழ்ச்சியில் விளம்பரப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close