[X] Close

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு


  • kamadenu
  • Posted: 18 May, 2019 12:26 pm
  • அ+ அ-

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோமாளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அடங்க மறு’. கார்த்திக் தங்கவேல் இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக ராஷி கண்ணா நடித்தார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இது, கடந்த வருடம் (2018) டிசம்பர் மாதம் வெளியானது.

இதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘கோமாளி’. காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகை கவிதா ரதேஷ்யம், கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ‘தனி ஒருவன்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயம் ரவி படத்துக்கு இசையமைத்துள்ளார் ஹிப் ஹாப் தமிழா.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக், இன்று (மே 18) வெளியாகியுள்ளது.

பள்ளியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்காக, 20 கிலோ எடை குறைந்துள்ளார் ஜெயம் ரவி. இது ஜெயம் ரவியின் 24-வது படமாகும்.

ஜெயம் ரவியின் 25-வது படத்தை லட்சுமணனும். 26-வது படத்தை அஹமதுவும் இயக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

comali first look.jpg 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close