[X] Close

நிரந்தரவு தீர்வு வரும் வரை எதுவும் மாறாது, மாறவும் கூடாது: ஜி.வி.பிரகாஷ்


gv-prakash-statement-sterlite

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 29 May, 2018 12:56 pm
  • அ+ அ-

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக  நிரந்தரவு தீர்வு நீதிமன்றத்தில் கிடைக்கும் வரை எதுவும் மாறாது , மாறவும் கூடாது என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின் 100-வது நாளன்று, போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து நிரந்தரமாக ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து ஆட்சியர் முன்னிலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆதங்கத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். தற்போது ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு இருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

உயிரைக் குடுத்து உரிமை காத்த போராளிகளின் உதிரம் பேசும் எம் மக்கள் வீர வரலாறு... அரசாணை தற்காலிக வெற்றி... நிரந்தரவு தீர்வு நீதிமன்றத்தில் கிடைக்கும் வரை எதுவும் மாறாது , மாறவும் கூடாது..!!

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close