[X] Close

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதே முழுமையான வெற்றி: சந்தோஷ் நாராயணன்


santosh-narayanan-statement

  • kamadenu
  • Posted: 29 May, 2018 12:50 pm
  • அ+ அ-

தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் போதுதான் முழுமையான வெற்றி என்று சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின் 100-வது நாளன்று நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து நிரந்தரமாக ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து ஆட்சியர் முன்னிலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆதங்கத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். தற்போது ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு இருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஒரு வாரத்திற்கு முன்பே ஆலையை மூடியிருந்தால், நாம் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். ஒரு மாபெரும் மக்கள் போராட்டத்துக்கு, இதுவொரு வசதியான எதிர்வினை மட்டுமே. நாம் வருங்காலத்தில் ஏதாவது கிடைக்க வேண்டுமென்றால், உயிர்தியாகம் செய்தாக வேண்டும் என்பது தான் இதன் மூலம் விடுக்கப்படும் செய்தி. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் போதுதான் இதை முழுமையான வெற்றி என்று சொல்ல முடியும்

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close