[X] Close

‘அயோக்யா’ படக்குழுவினரால் சர்ச்சை: மன்னிப்புக் கோரிய ராஷி கண்ணா


  • kamadenu
  • Posted: 17 May, 2019 10:47 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

'அயோக்யா' படக்குழுவினரின் செயலால் கோபமடைந்த ரவீனாவிடம், மன்னிப்புக் கோரியுள்ளார் ராஷி கண்ணா.

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அயோக்யா'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'டெம்பர்' படத்தின் ரீமேக்காகும்.

எப்போதுமே ஒரு படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் பெயரும், படத்தின் இறுதிகட்ட டைட்டில் கார்டில் இடம்பெறும். ஆனால், 'அயோக்யா' படத்தின் டைட்டில் கார்ட்டில் முன்னணி டப்பிங் கலைஞர் ரவீனாவின் பெயர் இடம்பெறவில்லை.

இது தொடர்பான தன் கோபத்தை ரவீனா தன் ட்விட்டர் பதிவில் “டப்பிங் கலைஞர்களின் பெயர்களை, 'அயோக்யா' படத்தின் இறுதிக்கட்ட டைட்டில் கார்டில் பார்க்கவில்லை. மெஸ் அண்ணாக்கள், டிரைவர்கள், பெயிண்டர்கள், சவுண்ட் மேலாளர்கள் என அனைவரது பெயர்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால், எங்களுடைய டப்பிங் கலைஞர்களின் பெயர்கள் மட்டும் பலமுறை விடுபடுகிறது. காத்திருப்போம்” என்று குறிப்பிட்டார்.

'அயோக்யா' படத்தில் ராஷிகண்ணாவுக்கு டப்பிங் பேசியவர் ரவீனா என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரவீனாவின் ட்விட்டர் பதிவைக் குறிப்பிட்டு ராஷி கண்ணா “மன்னித்து விடுங்கள் ரவீனா.. ஆனால் உங்களுடைய அழகான குரலை எனக்கு கொடுத்து திரையில் எனது நடிப்பை மேம்படுத்தியமைக்கு நன்றி கூற விரும்புகிறேன். உங்களுக்கு என்னுடைய அன்பு. நீங்கள் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும்” என்று தன் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close