[X] Close

'இந்தியன் 2' பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி: விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்


2

  • kamadenu
  • Posted: 15 May, 2019 17:14 pm
  • அ+ அ-

'இந்தியன் 2' படத்தில் நிலவிவந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, லைகா நிறுவனமே தயாரிக்க முன்வந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துவந்த 'இந்தியன் 2', முதற்கட்ட படப்பிடிப்போடு நிறுத்தப்பட்டது.  லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது.

கடந்த சில வாரங்களாக மக்களவைத் தேர்தல் பிரச்சாரம், இடைத்தேர்தல் பிரச்சாரம் என கமல் மும்முரமாக இருக்கிறார் கமல். மேலும், கமலுக்கு மேக்கப் அலர்ஜி, பட்ஜெட் அதிகம் என பல பிரச்சினைகள் படத்தைச் சுற்றின. இதனால், படப்பிடிப்பு தொடர்பாக லைகா நிறுவனம் எவ்வித முயற்சியுமே எடுக்காமல் இருந்தது. ஆனால், பேச்சுவார்த்தையில் மட்டும் ஈடுபட்டு வந்தது.

இயக்குநர் ஷங்கரோ, 'இந்தியன் 2' படத்தை எடுத்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். முதலில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ரிலையன்ஸ் நிறுவனம் படத்தின் களம் எப்படி, படமாக எப்படியிருக்கும் என்ற முழுவிவரத்தையும் கேட்டுள்ளது. இதற்காக படத்தின் கதை, நடிகர்களின் லுக், படத்தின் முக்கியமான காட்சிகள் என அனைத்தையும் புத்தக வடிவில் தயாரித்துள்ளது ஷங்கரின் குழு.

இதை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கொடுத்தது மட்டுமன்றி, புதிதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திலும் கொடுத்திருக்கிறார் ஷங்கர். இதனால், விரைவில் புதிய தயாரிப்பாளர் யார் என்பது தெரியவரும் சூழல் உருவானது. தற்போது லைகா நிறுவனம் - இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால், விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளனர். ஜுன் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகர்கள் அனைவரிடமும் தேதிகள் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

'பிக் பாஸ் 3' படப்பிடிப்புக்கு இடையே 'இந்தியன் 2' படப்பிடிப்பிலும் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார் கமல். 'இந்தியன் 2' தொடர்பான செய்தி, கமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close