[X] Close

‘அர்ஜுன் ரெட்டி’ தமிழ் ரீமேக் ‘ஆதித்யா வர்மா’: படப்பிடிப்பு நிறைவு


  • kamadenu
  • Posted: 15 May, 2019 15:51 pm
  • அ+ அ-

‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ஆதித்யா வர்மா’வின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், தமிழில் பாலா இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், இறுதிப் பிரதியைப் பார்த்த தயாரிப்பாளர்களுக்கு, படம் திருப்தி அளிக்கவில்லை. ஆகையால், முழுமையாகத் தயாரான ‘வர்மா’ படம் கைவிடப்பட்டது.

தற்போது ‘அர்ஜுன் ரெட்டி’ படம், ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதனை, ‘அர்ஜுன் ரெட்டி’ இயக்குநர் சந்தீப் வங்காவிடம் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக ரவி.கே.சந்திரனும், இசையமைப்பாளராக ரதனும் பணிபுரிகின்றனர்.

துருவ் விக்ரம், பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர்  நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. சமீபத்தில்தான் படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும், இடைவெளி இல்லாமல் படுவேகமாக படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.

இதன்படி, 50 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளனர். நேற்றுடன் (மே 14) இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close