[X] Close

மஹரிஷி அற்புதமான படம் - துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு பாராட்டு


  • kamadenu
  • Posted: 15 May, 2019 11:36 am
  • அ+ அ-

மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகியுள்ள 'மஹரிஷி' திரைப்படத்தை, துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

வம்ஷி இயக்கத்தில் மகேஷ் பாபு, அல்லரி நரேஷ், பூஜா ஹெக்டே நடித்துள்ள திரைப்படம் 'மஹரிஷி'. கடந்த வாரம் இத்திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களுக்கு நடுவில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், வெளியான நான்கு நாட்களில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்துள்ள துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு, தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கிராமத்தைச் சார்ந்த கதையைத் திரையில் கொண்டு வந்ததன் மூலம், விவசாயப் பாதுகாப்பு மற்றும் முதியவர்களுக்கான ஆதரவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தப் படம் எடுத்துச் சொல்கிறது. 'மஹரிஷி', எல்லோரும் பார்க்க வேண்டிய அற்புதமான திரைப்படம். கிராம மக்களின் பெருமையையும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்கிறது" என்று பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள மகேஷ் பாபு, "சார், இது எனக்கும், எங்கள் மொத்தக் குழுவுக்கும் பெரிய பெருமை. இதைவிட மகிழ்ச்சி இருக்காது. நன்றி. உங்கள் வார்த்தைகள், ‘மஹரிஷி’ போல இன்னும் பல (நல்ல) படங்களை எடுக்க தூண்டுகோலாக இருக்கிறது. ‘மஹரிஷி’ குழுவின் சார்பாக மிக்க நன்றி" என்று கூறியுள்ளார்.

இயக்குநர் வம்சி, "சார், இது எங்கள் படத்துக்குக் கிடைத்த பெரிய பெருமை. உங்கள் பாராட்டு என்றும் நினைவில் இருக்கும், எங்களுக்கு இன்னும் அதிக பொறுப்புணர்வைத் தரும். உங்கள் பாராட்டுகளைப் பெற்றதில் குழுவாக நாங்கள் சந்தோஷப்படுகிறோம். நன்றி" என்று பதிலளித்துள்ளார்.

இதற்கு முன்னர் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தையும் பார்த்து வெங்கைய்யா நாயுடு பாராட்டியிருந்தது நினைகூரத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close