[X] Close

‘காலா’வை அச்சுறுத்தும் ‘ஜுராசிக் பார்க்: ஃபாலன் கிங்டம்’; ‘ரேஸ் 3’- வசூல் பாதிப்பு கலக்கத்தில் விநியோகஸ்தர்கள்!


kalaa-jurasikpark-race-3-release

  • kamadenu
  • Posted: 28 May, 2018 11:05 am
  • அ+ அ-

கா.இசக்கிமுத்து

ஜுன் 7-ம் தேதி வெளியாகவுள்ள ‘காலா’ படத்துக்கு அச்சுறுத்தலாக அதே நாளில் ரிலீசாகும் ‘ஜுராசிக் பார்க்: ஃபாலன் கிங்டம்’ இருக்கும் என்கிறது விநியோகஸ்தர்கள் தரப்பு. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’, அனைத்துப் பணிகளும் முடிந்து ஜுன் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

தற்போது தமிழக ஏரியா வாரியாக உரிமையைக் கைப்பற்ற, விநியோகஸ்தர்களிடையே கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜுன் 8-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ‘ஜுராசிக் பார்க்: ஃபாலன் கிங்டம்’ திரைப்படம் ஒரு நாள் முன்னதாக ஜுன் 7-ம் தேதியே வெளியாகவுள்ளது.

‘ஜுராசிக் பார்க்’ படங்கள் எப்போதுமே குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத் தக்கது.

 2015-ம் ஆண்டு வெளியான ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படம் இந்திய அளவில் சுமார் 125 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது. எப்போதுமே ரஜினி படமென்றாலே போட்டிக்கு எந்த ஒரு படமும் வெளியாகாது. ஆனால், இம்முறை ‘ஜுராசிக் பார்க்: ஃபாலன் கிங்டம்’ வெளியாவது, கண்டிப்பாக ‘காலா’ படத்தின் வசூலை சிறியளவிலேனும் பாதிக்கும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.

தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் என்று ஒரே சமயத்தில் இந்தியா முழுவதும் ‘ஜுராசிக் பார்க்: ஃபாலன் கிங்டம்’ வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜுன் 15-ம் தேதி சல்மான்கான் நடிப்பில் வெளியாகும் ‘ரேஸ் 3’ படமும், ‘காலா’ படத்துக்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியில் பெரும் சவாலாக இருக்கும். 2-வது வாரம் தான் என்றாலும், ‘காலா’ படத்துக்கு பெரும் முதலீடு செய்திருப்பதால் இந்தச் சவாலை எப்படி சமாளிக்கலாம் என்று விநியோகஸ்தர்கள் ஆலோசனையில் இறங்கியிருக்கிறார்கள்.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இம்முறை ரஜினி படங்களுக்கு ‘ஜுராசிக் பார்க்: ஃபாலன் கிங்டம்’ மற்றும்‘ரேஸ் 3’ சவாலாக இருப்பதால் விநியோகஸ்தர்கள் தரப்பில் பரபரப்பாக திரையரங்குகள் ஒப்பந்தம் போடப்பட்டு வருகின்றன.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close