[X] Close

‘தர்பார்’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு


  • kamadenu
  • Posted: 14 May, 2019 17:30 pm
  • அ+ அ-

ரஜினி நடித்துவரும் ‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘தர்பார்’. ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதை, லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார்.

ஹீரோயினாக நயன்தாரா நடிக்க, ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். மேலும், ப்ரதீக் பப்பார், தலிப் தஹில், யோகி பாபு, ஆனந்த் ராஜ், போஸ் வெங்கட், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, இதன் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. ரஜினி, நயன்தாரா, யோகி பாபு சம்பந்தப்பட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டன. அந்தக் காட்சிகள், புகைப்படங்களாக அடிக்கடி லீக் ஆகின. இதனால் அதிர்ச்சியான படக்குழு, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து படப்பிடிப்பு நடத்தியது.

இந்நிலையில், நேற்றுடன் (மே 13) முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. எனவே, மும்பையில் இருந்து சென்னை திரும்பிவிட்டார் ரஜினி. சில நாட்கள் ஓய்வுக்குப்பின், இந்த மாத இறுதியில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

‘தர்பார்’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட வேண்டியவை என்பதால், இரண்டாம்கட்ட படப்பிடிப்பும் மும்பையிலேயே நடைபெறும் எனத் தெரிகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close