[X] Close

சூர்யாவின் பெண் ரசிகைகளுக்காக கேரளாவில் தனி ஷோ


  • kamadenu
  • Posted: 14 May, 2019 16:24 pm
  • அ+ அ-

சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே.’ படத்தைப் பார்க்க, பெண் ரசிகைகளுக்காக கேரளாவில் தனி ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘என்.ஜி.கே’. நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே’. இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது. பொலிட்டிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வருகிற 31-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸாகிறது. தமிழில் உருவாகியுள்ள இந்தப் படம், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. சூர்யா - செல்வராகவன் - யுவன் கூட்டணி என்பதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

கேரளாவிலும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எனவே, ‘என்.ஜி.கே.’ படத்தைப் பார்ப்பதற்காக, கேரளாவில் உள்ள பெண் ரசிகைகளுக்கு என தனி ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றமும், மலப்புரம் வி1000 லவ்வர்ஸ் லேடீஸ் யூனிட்டும் சேர்ந்து இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளன.

மே 31-ம் தேதி காலை 10.30 மணிக்கு, சங்கரம்குளத்திலுள்ள மார்ஸ் சினிமாஸில் இந்த ஷோ நடைபெறவுள்ளது.

ngk kerala.jpg 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close