[X] Close

சந்தானம் அண்ணனை 3 பார்ட்டா பிரிச்சுக் கொடுத்திட்டார் இயக்குநர்: சிவகார்த்திகேயன்


3

  • kamadenu
  • Posted: 14 May, 2019 15:47 pm
  • அ+ அ-

சந்தானம் அண்ணனை 3 பார்ட்டா பிரிச்சுக் கொடுத்திட்டார் இயக்குநர் எம்.ராஜேஷ் எனத் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற 17-ம் தேதி ரிலீஸாகும் படம் ‘Mr. லோக்கல்’. எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

பொதுவாக, எம்.ராஜேஷ் படங்கள் என்றாலே சந்தானம் இருப்பார். ஆனால், சந்தானம் இல்லாமல் இந்தப் படத்தை எடுத்துள்ளார் எம்.ராஜேஷ். இதுகுறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது, “சந்தானம் அண்ணனை 3 பார்ட்டா பிரிச்சு, யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ்னு கொடுத்திட்டார் இயக்குநர்.

யோகி பாபு, ஏரியா ஃப்ரெண்ட். சதீஷ், ஆபீஸ் ஃப்ரெண்ட். ரோபோ சங்கர், ஆபீஸ் மேனேஜர். இந்த மாதிரி மேனேஜர்கிட்ட நாங்க படுற கஷ்டங்கள் அப்படியே ஜாலியா போகும்.

எப்போதுமே காமெடியன்களுடன் பணியாற்றுவது என்பது எனக்கு எக்ஸ்ட்ரா கம்ஃபர்ட்டபிளா இருக்கும். ஏனென்றால், எனக்கு காமெடி ரொம்பப் பிடிக்கும், அதில் இருந்துதான் தொடங்கி வந்துருக்கோம். காமெடியன்களுக்கு நிறைய காட்சிகள் கொடுத்தால் பார்க்குறதுக்கு நல்லா இருக்கும் என இயக்குநரிடமும் சொன்னேன்” என்றார்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருக்கும் யோகி பாபு பற்றி, “ ‘மான் கராத்தே’ படத்தில் இருந்தே யோகி பாபு நல்ல பழக்கம். அப்புறம், ‘காக்கி சட்டை’ படத்தில் ஒரு காட்சியில் நடித்தார். தற்போது நான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் யோகி பாபுவும் நடிக்கிறார்.

அவர் நேச்சுரலான காமெடியன். அவர் பெரிசா எஃபக்ட் போடத் தேவையே இல்லை. நீங்க ஸ்கிரீன்ல பார்க்குற யோகி பாபுதான், நிஜ வாழ்க்கையிலும். தொடர்ச்சியா கவுன்ட்டர் வந்து விழுந்துகிட்டே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close